“சம்சாரம் அது மின்சாரம்” பட நடிகையும், உமா ரியாஸ் அம்மாவுமான கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

By Nanthini on தை 11, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் இருந்து அம்மா மற்றும் குடும்ப தலைவி உள்ளிட்ட குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை கமலா காமேஷ் உடல் நலக்குறைவால் காலமானார். மறைந்த நடிகர் விசுவின் பெரும்பாலான படங்களில் தோன்றி நடிப்பில் முத்திரை பதித்தார். தமிழில் சிறந்த குடும்ப திரைப்படமாக இருந்து வரும் சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் கோதாவரி என்ற கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார். கமலா காமேஷ் என்று சொன்னாலே இவருடைய அந்த கோதாவரி கதாபாத்திரம் தான் அனைவருடைய நினைவுக்கும் வரும். 1996 காலகட்டத்தில் சினிமா படப்பிடிப்பின் போது இடுப்பில் காயமடைந்த நிலையில் 7 ஆபரேஷன் செய்து கொண்டார்.

Breaking: பிரபல தமிழ் நடிகை கமலா காமேஷ் காலமானார்… பிரபலங்கள் இரங்கல்…!!! – Seithi Solai

   

தன்னுடைய இடுப்பு வலியையும் பொருட்படுத்தாமல் நடிப்பை தொடர்ந்த நிலையில் 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடிப்புக்கு பிரேக் எடுத்தார். கடைசியாக தமிழில் என் உயிரினும் மேலான என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு சுமார் 15 ஆண்டுகள் கழித்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான வீட்ல விசேஷம் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். சினிமாவில் விருப்பமில்லாமல் நடிக்க வந்ததாக கூறிய கமலா காமேஷ் 500க்கும் மேற்பட்ட படங்களில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் 1974 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் காமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு உமா என்ற ஒரே ஒரு பெண் குழந்தை பிறந்தது.

   

70 வயசாகுது... பிக் பாஸ் போட்டிக்குக் கூப்பிட்டா நான் ரெடி'" - கமலா காமேஷ் | actress kamala kamesh talks about her family members love - Vikatan

 

திடீர் உடல்நலக் குறைவால் காமேஷ் உயிரிழந்த நிலையில் நடிகையாகவும் சிங்கிள் மதர் ஆகவும் தன்னுடைய மகள் உமாவை வளர்த்துள்ளார். கமலா காமேஷ் மகள் உமா சினிமாவில் நடிகையாக நடித்து வரும் நிலையில் அன்பே சிவம், தூங்காவனம் மற்றும் மௌனகுரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவ்வாறு நடிகர் ரியாஸ் கானை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளன. சென்னையில் தனது மகளுடன் வசித்து வந்த கமலா காமேஷ் உடல் நல குறைவு காரணமாக இன்று காலை காலமானார். இவருடைய மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.