அன்னைக்கு என்னோட சம்பளம் வெறும் 30 ரூபாய்.. நான் சந்தோசமா வாழ இது போதும்.. மனம் திறந்த தாடி பாலாஜி..!

By Nanthini on தை 10, 2025

Spread the love

அஜித் மற்றும் விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் காமெடி வேடத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகரும் தொகுப்பாளருமான தாடி பாலாஜி. முதலில் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் அதன்பிறகு சின்னத்திரையில் நுழைந்து பிறகு சினிமாவில் ஜொலித்தவர். இவர் நித்யா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் உள்ளார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். இருவருமே தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தனர். அதன் பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் தற்போது தனித்தனியாக தான் வாழ்ந்து வருகின்றனர்.

   

குடும்ப வாழ்க்கை இப்படி இருக்க சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் தாடி பாலாஜி விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்த இவர் விஜயின் உருவத்தை தனது நெஞ்சில் பச்சை குத்திய வீடியோவும் வெளியாகி இருந்தது. இப்படியான நிலையில் தாடி பாலாஜி தனது சினிமா வாழ்க்கை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அதில், நான் முதன் முதலில் வாங்கிய சம்பளம் வெறும் 30 ரூபாய் தான். அந்த 30 ரூபாய்க்கு உள்ள நான் சாப்பாடு வீட்டு வாடகை என எல்லாத்தையும் முடிச்சுக்கணும்.

   

 

ஒரு சின்ன ரூம் அதுக்கு ஆயிரம் ரூபாய் வாடகை கேட்டாங்க. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு சினிமாவுல எனக்கு வாய்ப்பு கிடைத்ததும் முதலில் நான் 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கினேன். அந்த பணத்தை எடுத்துக்கிட்டு என்னுடைய அப்பாவையும் தங்கச்சியும் பாக்குறதுக்கு போன. பிறகு டிவி சீரியல்களில் நடிக்க ஒரு நாளைக்கு எனக்கு ஏழாயிரம் ரூபாய் கொடுத்தாங்க. அது கொஞ்சம் கொஞ்சமா உயர்ந்து 15 ஆயிரம் ரூபாய் வரை வந்தது. ஆனா மாசத்துல மொத்தம் எட்டு நாளைக்கு தான் ஷூட்டிங் இருக்கும். வர பணத்தை வைத்து எல்லாத்தையும் சமாளிச்சுக்கணும்.

நான் ஆசை ஆசையா கட்டுன வீடு 48 லட்சம். பல நாள் தூங்காம உழைச்சி அந்த கடனை அடைக்க ஓடி இருக்கேன். இன்னைக்கும் எனக்கு நிறைய லோன் இருந்துகிட்டு தான் இருக்கு. அதிகமா சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் எனக்கு இல்ல. குடியிருக்க ஒரு வீடு போய் வர ஒரு கார் இது மட்டும் எனக்கு போதும். அளவுக்கு அதிகமா ஆசைப்பட மாட்டேன் என்று தனது சினிமா வாழ்க்கை குறித்து தாடி பாலாஜி பேசியுள்ளார்.