தனது மகளுடன் சேர்ந்து சூப்பராக பாடல் பாடிய நடிகர் லிவிங்ஸ்டன்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

By Soundarya on தை 10, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக நடித்தார். அந்த திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் நுழைந்தார். அதோடு அந்த திரைப்படத்தின் உதவி இயக்குனராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

   

1988 ஆம் ஆண்டு வெளியான பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.  அடுத்ததாக சுந்தர புருஷன், சொல்லாமலே, விரலுக்கேத்த வீக்கம், என் புருஷன் குழந்தை மாதிரி, எங்களுக்கெல்லாம் காலம் வரும் ஆகிய படங்களில் முன்னணி கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் லிவிங்ஸ்டன். 1990களின் பிற்பகுதியில் 2000 முற்பகுதியிலும் விஜய் அஜித் ஆகியோருக்கு இணையாக போற்றப்பட்டவர் லிவிங்ஸ்டன்.

   

 

அதற்குப் பிறகு வில்லன் கதாபாத்திராத்திலும் கேமியோ கதாபாத்திரத்திலும் நடித்து புகழ்பெற்றார். இப்படி பல புகழுக்குரிய இவர் ஜசின்தா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஜோவிதா மற்றும் ஜமீனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.  இவரின் மகள் தான் ஜோவித்த லிவிங்ஸ்டன் ஜோனாஸ். இவர் தற்போது தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் லிவிங்க்ஸ்டன் மற்றும் வருடைய மகள் ஜோவிதா இருவரும் சிவாஜியின் பூங்காற்று திரும்புமா பாடலை அழகாக பாடியுள்ளனர். இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்களோ அழகாக பாடுவதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Jovita L (@jovitaalivingston)