பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருக்கும். அந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கும். சின்னத்திரையில் இருந்து பல நடிகர் நடிகைகள் வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் சக்திவேல். இந்த சீரியலில் லீட் ரோல்லில் வேலுவாக நடிகர் பிரவீன் ஆதித்யா நடித்து வருகின்றார். மாடலிங் உலகில் இருந்து வந்த பிரவின் ஆதித்யாவின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் மற்றும் மறுக்க முடியாத திறமை அவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் பலரின் கவனத்தை ஈர்த்தது.

இருப்பினும், அவரது நடிப்பு ஆர்வமே அவரை சினிமாவிற்கு கொண்டு வந்து சேர்த்தது. இவர் தற்போது Mahindra Thor Roxx என்ற காரை வாங்கியுள்ளார். இதனுடைய விலை ரூ. 16 லட்சத்தில் இருந்து ரூ. 28 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
