நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் முன்னணி நடிகை ஆவார். கேரளாவில் பிறந்து வளர்ந்த இவரது இயற்பெயர் டயானா மரியா குரியன் என்பதாகும். ஆரம்பத்தில் மலையாள தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார் நயன்தாரா. பின்னர் 2003 ஆம் ஆண்டு மலையாள மொழி சினிமாவில் அறிமுகமானார். பிறகு 2005 ஆம் ஆண்டு “ஐயா” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.

அதே ஆண்டு ரஜினிகாந்துக்கு ஜோடியாக “சந்திரமுகி” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் நயன்தாரா. தொடர்ந்து சிவகாசி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, சத்யம், பாஸ் என்கிற பாஸ்கரன், திருநாள், காஷ்மோரா, காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற பல வெற்றி திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றார் நயன்தாரா.
ஹீரோக்கள் இல்லாமல் நாயகி கதை அம்சம் கொண்ட படங்கள் ஆன இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, நெற்றிக்கண் போன்ற திரைப்படத்தில் நடித்தார். அதிலிருந்து இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று மக்கள் அழைக்க ஆரம்பித்தனர். எந்த கதாபாத்திராம் என்றாலும் கச்சிதமாக நடிக்க கூடியவர் நயன்தாரா. ஆனால் சமீபத்திய காலங்களில் பல சர்ச்சைகளில் மாட்டி வருகிறார் நயன்தாரா.

#image_title
அதன்படி தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து தயாரிப்பாளர்களுக்கு தலைவலியை கொடுத்து வருகிறார்கள். அது என்னவென்றால் விக்னேஷ் சிவன் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் LIK. இதில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை தயாரிப்பது 7 ஸ்கிரீன்ஸ் ஸ்டூடியோ. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெறாமல் தற்போது நிப்பாட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் பட்ஜெட் பற்றாக்குறை. தயாரிப்பு நிறுவனம் நாங்கள் பட்ஜெட் எவ்வளவோ அதை கொடுத்து விட்டோம். அதற்குள் நீங்க முடிக்காதது உங்க தவறு என்று கூறுகிறார்கள்.
ஆனால் விக்னேஷ் சிவன் அதிகப்படியாக பட்ஜெட் கேட்கிறார். இந்நிலையில் ஏற்கனவே நயன்தாராவும் கவினும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த திரைப்படத்தை தயாரிக்க இருப்பதும் 7 ஸ்கிரீன்ஸ் ஸ்டூடியோ தான். தனது கணவரின் படத்திற்கு பணம் தரவில்லை என்பதால் நயன்தாரா அவர் கமிட் ஆகி இருக்கும் படத்திற்கு சூட்டிங் வராமல் தவிர்த்துக் கொண்டே இருக்கிறாராம். நயன்தாரா ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு அதுதான் பணம் இல்லை என்று சொன்னிங்களே அவருக்கு முதல்ல முடிங்க அதுக்கப்புறம் நான் வரேன் அப்படின்னு சொல்லி தெனாவட்டாக பதில் கூறியிருக்கிறாராம்.

இது என்னடா புது வம்பா போச்சு என்று கணவன் மனைவியாக விக்கி நயன் இருவரும் சேர்ந்து கொண்டு தயாரிப்பாளர்களுக்கு தலைவலியை கொடுத்து வருகிறார்கள். இவர்கள் மேல் தயாரிப்பாளர்கள் பெரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். பல நட்சத்திர ஜோடிகள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். அஜித்- ஷாலினி, சூர்யா- ஜோதிகா, பாக்யராஜ்- பூர்ணிமா போன்ற எவரும் இந்த மாதிரி யாருக்கும் தொல்லை கொடுத்ததில்லை என்று பேசி வருகிறார்கள்.
