கொரோனா என்ற கொடிய நோயானது உலகத்தையே ஆட்டிப்படைத்து விட்டது. அந்த ஒரு மிகப்பெரிய கொடிய வைரஸ் பல லட்சம் மக்களை உயிரிழக்க செய்துவிட்டது. அதற்குப் பிறகு வைரஸ் என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரும் பயப்படும் அளவிற்கு தான் இருக்கிறது. தற்போது புதிதாக டிங்கா டிங்கா என்ற வைரஸ் வந்திருக்கிறது. அது எந்த நாட்டில் வந்திருக்கிறது? அது வந்தால் மனிதர்களை நடனம் ஆட வைக்கும் என்று கூறுகிறார்கள். அதை பற்றி இனி காண்போம்.

உகண்டா நாட்டில் தான் இந்த டிங்கா டிங்கா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரசால் இதுவரை 300க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் மற்றும் சிறுமிகளை தான் இந்த வைரஸ் அதிகமாக தாக்குகிறதாம். இந்த நோய் எதனால் வருகிறது எப்படி பரவுகிறது போன்ற காரணம் குறித்து இன்னும் ஏதும் தெரியவில்லை.
ஆனால் இந்த டிங்கா டிங்கா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நிற்காமல் நடுங்கிக் கொண்டே இருப்பார்களாம். இந்த நடுக்கமானது பார்ப்பதற்கு மற்றவர்களுக்கு நடனம் ஆடுவது போல் இருக்குமாம். இந்த வைரஸின் ஆரம்ப அறிகுறி காய்ச்சல். அதற்கு அடுத்தது தான் நடுக்கம் வரும். இது புதுவிதமான வைரஸ் ஆக இருப்பதால் இதற்காக சிகிச்சை மற்றும் மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த டிங்கா டிங்கா வைரஸை கவனிக்காமல் விட்டால் கை கால் முடக்கம் உடல் செயலிழந்து போவது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த வைரஸ் எங்கிருந்து பரவ ஆரம்பித்தது என்பதை அந்நாட்டின் அரசாங்கம் கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்ட சிலர் உடல் நடுக்கத்தை தாங்க முடியாமல் இருக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இந்த நோய் தாக்கியவர்கள் அவர்கள் உடல் கட்டுப்பாட்டில் இல்லாமல் கடுமையாக நடுங்குகிறது. அது பார்ப்பவர்களுக்கு நடனம் ஆடுவது போல் இருக்கிறது. இது என்னடா புதுசா இருக்கு உலகம் எங்கு போகுதோ என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
