மீனாவுக்கு இரண்டாம் திருமணமா?.. நச்சுனு பதில் சொல்லி ஒட்டுமொத்த வாயையும் மூடிய நடிகர் சரத்குமார்..!

By Nanthini on மார்கழி 27, 2024

Spread the love

தென்னிந்தியா சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி அதன் பிறகு கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதனிடையில் மீனா வித்தியாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார். இவர் விஜயுடன் தெறி திரைப்படத்தில் நடித்திருந்தார். மீனாவின் கணவருக்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை இருந்ததால் இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. பிறகு இவருடைய உடல் நிலை மிகவும் மோசமாகி சிகிச்சை பலனின்றி கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் உயிரிழந்து விட்டார்.

நடிகர் சொன்ன ஒரு வார்த்தை!.. தவறாமல் கடைபிடிக்கும் மீனா.. யாரு என்ன  சொல்லியிருப்பா?..

   

வித்யாசாகரின் இறப்புக்கு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேசமயம் மீனாவுக்கு ஆறுதலாக அவருடைய தோழிகள் தான் இருக்கிறார்கள். கணவரின் இறப்பிலிருந்து மீண்டு வந்த மீனா தற்போது மீண்டும் படங்களில் நடித்துக்கொண்டோம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றும் வருகிறார். பிரபலங்கள் மற்றும் கிசுகிசுக்களை பிரிக்கவே முடியாது. அதுவும் நடிகைகள் பற்றிய கிசுகிசுக்கள் அடிக்கடி வருவது சகஜம் தான். அதன்படி மீனா குறித்தும் மீனா இரண்டாம் திருமணம் செய்ய போகிறார் என்ற கிசுகிசு அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது. இதற்கு மீனாவும் பொய் வதந்தியை பரப்ப வேண்டாம் என கூறி இருந்த போதும் அந்தச் செய்தி அடங்கிய பாடில்லை.

   

நடிகை மீனா கணவரின் உயிரிழப்பு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் | Tamil News  Actress Meena Husband Vidyasagar passed away

 

இப்படியான நிலையில் மீனாவின் நெருங்கிய நண்பரும் பிரபல நடிகருமான சரத்குமார் சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மீனாவின் இரண்டாம் திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், அந்த காலத்துல சினிமாவில் இருக்க ஒருத்தங்க என்ன பண்ணாங்கன்னு யாருக்குமே தெரியாது. ஆனா இன்னைக்கு திரை பிரபலங்கள் பற்றி எல்லா விஷயமும் எல்லோருக்கும் தெரிவதற்கு முக்கிய காரணம் சோசியல் மீடியா தான். இன்னைக்கு மீனாவே இன்னொரு திருமணம் செய்றாங்க அப்படின்னு செய்தி வருதுன்னா அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை.

அரசியல் பிரமுகருடன் தொடர்பா.. மீனாவை பற்றி பேசிய சரத்குமார்!!

அவங்க வாழ்க்கைய எப்படி வாழனும்னு அவங்களுக்கு தெரியும். அதை முடிவு பண்றதுக்கு நாம யாரு. நமக்கு என்ன உரிமை இருக்கு. அவங்க இப்படித்தான் வாழ வேண்டும் என்று நாம் சொல்லித் தர வேண்டிய அவசியம் கிடையாது. ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் அவங்க என்ன கஷ்டத்தில் இருப்பாங்க என்று வெளியில் இருந்து பார்க்கிற யாருக்கும் தெரியாது. திரை பிரபலங்கள் எல்லோருமே தினம் தினம் ஒரு பிரச்சனையை சந்திச்சுக்கிட்டு தான் இருக்காங்க. அவங்க வாழ்க்கையில நீங்க குறுக்கிட வேண்டாம். அவங்களுக்கு ஏதாவது உங்ககிட்ட சொல்லனும்னு இருந்தா அவங்களே சொல்லுவாங்க. சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என சரத்குமார் ஓபன் ஆக பதில் அளித்துள்ளார்.