சீரியல் என்றாலே அது சன் டிவி தான். இன்று ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு சன் டிவி சீரியல்கள் பல வருடங்களாக கெடுத்துக் காட்டி வருகிறது என்று சொல்லலாம். அதற்கு காரணம் அந்த சீரியல்களில் வரும் கதாபாத்திரங்களும் கதைகளும் மக்களை வெகுவாக கவர்ந்து விட்டது. சன் டிவி தான் டிஆர்பி முன்னிலை வகித்து வருகிறது. மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தால் அதை பல வருடங்களாக கொண்டு வந்து விடுவார்கள். அதே நேரத்தில் பிடிக்கவில்லை என்றால் டிஆர்பி ரேட்டில் அடி வாங்கிவிட்டது என்று தெரிந்ததும் புது சீரியல் ஆக இருந்தாலும் அதை அவசர அவசரமாக முடித்து விடுவார்கள்.

அந்த வகையில் ஓரளவுக்கு சரியில்லாத சீரியல்கள் எல்லாம் சரி செய்யும் விதமாக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் புத்தம் புது சீரியல்களை ஆரம்பித்தார்கள். அந்த வகையில் இந்த வருடம் மட்டுமே மல்லி, மருமகள், ரஞ்சனி, மூன்று முடிச்சு, அன்னம் போன்ற பல சீரியல்கள் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த நிலையில் சன் டிவி சீரியலை தவிர்த்து மக்கள் வேறு எந்த சேனலிலும் உள்ள நாடகத்தை மக்கள் பார்த்து திசை திரும்பி விடக்கூடாது என்பதற்காக கலாநிதி மாறன் தந்திரமாக செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில் மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் ரோஜா இரண்டாம் பாகம் சீரிலும் ஒளிபரப்பாக இருக்கிறது. அதுமட்டுமின்றி தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் திருசெல்வத்திடம் பேசி எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்திற்கு எப்படி வலைவிரித்தாரோ அதேபோல திருமுருகன் இயக்கிய பல சீரியல்கள் மக்களிடத்தில் ஹிட் ஆகியிருக்கிறது.

இதனால் திருமுருகனிடமும் அவருடைய ஏதாவது ஒரு சீரியல் இரண்டாம் பாகத்தை கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்கிறது. இதனால் திருமுருகனின் சீரியல் கூடிய விரைவில் வரப்போகிறது.
