தமிழ் சினிமாவுக்கு வயது 100க்கு மேல் ஆகிவிட்டது. பல ஆயிரக்கணக்கான படங்கள் வந்து அதில் சில ஆயிரம் படங்கள் வெற்றிப்படமாகியுள்ளன. நூற்றுக்கணக்கான ஜாம்பவான்கள் உருவாகியுள்ளனர். ஆனால் தமிழ் சினிமாவின் போக்கை அதன் பரிணாமத்தை புரிந்துகொள்ள போதுமான பதிவுகள் இல்லை. பல கிளாசிக் படங்களின் ஒரிஜினல் பிர்ண்ட் கூட இல்லை.
சினிமாவை பற்றி தமிழ் சினிமாக்கள் பெரிதாக வெற்றி பெற்றதேயில்லை என்ற செண்ட்டிமெண்ட் தமிழ் சினிமாவில் உண்டு. ஆனால் இலக்கிய உலகில் தமிழ் சினிமாவில் இருக்கும் அபத்தமான விஷயங்களைப் பற்றி இரண்டு அற்புதமான நாவல்கள் பதிவு செய்துள்ளன.
இந்நிலையில் சினிமாவைப் பற்றி சினிமா எடுத்தால் அந்த படங்கள் ஓடாது என்று ஒரு செண்ட்டிமெண்ட் தமிழ் சினிமாவில் உள்ளது. சினிமாவுக்குப் போன சித்தாளு முதல் உத்தம வில்லன் வரை அதற்குப் பல உதாரணங்கள் சொல்லப்படுகின்றன. அதனால் மெட்டா சினிமா எனப்படும் சினிமாவைப் பற்றிய சினிமாக்கள் தமிழ் சினிமாவில் குறைவு.

ஆனால் உலகளவில் இந்த பாணியிலான படங்கள் அதிகளவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. சினிமா பாரடைசோவில் இருந்து லா லா லேண்ட் வரை பல உதாரணங்களை சொல்லலாம்.
ஆனால் இந்த செண்ட்டிமெண்ட்டை பொய்யாக்கி வெற்றி பெற்ற படங்களும் தமிழ் சினிமாவில் உள்ளன. கே பாலச்சந்தரின் சர்வர் சுந்தரம், வீ சேகரின் ‘நீங்களும் ஹீரோதான்’, கௌதம் மேனனின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் பார்த்திபனின் “கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ ஆகிய படங்கள் ஹிட் படங்களாகவே அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
