“ஒரு வார்த்தை எல்லாத்தையும் மாற்றியது”.. இதற்கெல்லாம் காரணம் பாலா தான்.. வணங்கான் விழாவில் நெகிழ்ந்த சூர்யா..!

By Nanthini on மார்கழி 19, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது. இந்தத் திரைப்படத்தில் அருண்விஜய் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுடன் 25 ஆண்டுகளைக் கடந்த பாலாவின் திரைப்பயணத்தையும் இணைந்து பாலா 25 என்ற பெயரில் கொண்டாடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, விக்ரமன், மிஸ்கின் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டனர்.

Suriya Smoked 300 Times for Bala at Vanangaan Audio Launch : நான் சிகரெட் பிடிச்சதே இல்ல; பாலாவுக்காக முதல் முறையாக சிகரேட் பிடிச்சேன்: வணங்கானில் சூர்யா!

   

அப்போது இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா, இயக்குனர் பாலாவின் சேது திரைப்படம் எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நடிகரால் இப்படி எல்லாம் நடிக்க முடியுமா? ஒரு இயக்குனரால் இப்படி ஒரு படத்தை இயக்க முடியுமா என்று எனக்கு தோன்றியது. பல நாட்கள் சேது படத்தின் தாக்கம் எனக்குள் இருந்தது. அடுத்த படம் உன்னை வைத்து இயக்குகிறேன் என பாலா சொன்ன ஒரு வார்த்தை எல்லாவற்றையும் மாற்றி விட்டது. 2000 ஆம் ஆண்டு எனக்கு அந்த தொலைபேசி அழைப்பு வரவில்லை என்றால் எனக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்காது.

   

பாலாவிடமிருந்து அந்த அழைப்பு வரவில்லை என்றால்...” - 'வணங்கான்' விழாவில் நெகிழ்ந்த சூர்யா | actor suirya speech at vanangaan audio launch praise director bala - hindutamil.in

 

நந்தா படம் பார்த்துவிட்டு தான் கௌதம் வாசுதேவ் மேனன் காக்க காக்க படத்தில் நடிக்க என்னை அழைத்தார். அதன்பிறகு இயக்குனர் முருகதாஸ் அழைத்தார். இவை எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம் இயக்குனர் பாலா தான். உறவுகளுக்கு தன்னுடைய படங்களில் பாலா அதிக மதிப்பு கொடுப்பார். பாலா அண்ணன் என்ற ஒரு வார்த்தை வெறும் வார்த்தை கிடையாது, அது ஒரு உறவு, நிரந்தரமான உறவு. இந்த வாழ்க்கை கொடுத்ததற்கு என்னுடைய அன்பும் மரியாதையும் என்று மேடையில் சூர்யா உருக்கமாக பேசினார்.