தியேட்டர்ல ஓடலன்னா என்ன..? OTT-யில் பெரும் சாதனை படைத்த கங்குவா..!

By Soundarya on மார்கழி 18, 2024

Spread the love

சிறுத்தை சிவா இயக்கத்தால் சூர்யா நடிப்பில் வெளியான திரைபடம் கங்குவா. சினிமாவை பொறுத்த வரையில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான். இது எல்லாம் முன்னாடி நடிகர்களுக்குமே நடக்கின்ற ஒரு விஷயம். ஆனால்  கங்குவா திரைப்படத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் வச்சி செய்து வருகின்றனர். சினிமா விமர்சனங்கள் ஆன ப்ளூ சட்டை மாறன் மற்றும் பிஸ்மி உள்ளிட்ட பலரும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்ததற்கான காரணமே கங்குவா பட குழுவினரின் பேச்சு தான். சென்னை தொடங்கி மலேசியா வரை தயாரிப்பாளர் ஞானவேல் மற்றும் சூர்யா ஆகியோர் மேடையில் ஓவர் பில்டப் செய்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினர்.

   

இருந்தாலும் ஒற்றை ஆளாக படத்தை தாங்கி நின்ற சூர்யாவின் நடிப்பு, ஒளிப்பதிவு மற்றும் சிவாவின் பிரம்மாண்ட படைப்பு இதெல்லாம் தமிழ் சினிமாவில் புதியது என்று ஜோதிகா மற்றும் மாதவன் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர். படம் வெளியானது முதலே படத்தில் இரைச்சல் அதிகம் உள்ளிட்ட பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இதனையடுத்து படக்குழு படத்தை ட்ரிம் செய்து வெளியிட்டார்கள். அதன்பின்னர் ஒரு சிலர் இப்போ நன்றாக இருக்கிறது என்றும் சொன்னார்கள்.

   

 

இந்த படம் வெளியான தருணத்தில் லக்கி பாஸ்கர், அமரன் போன்ற படங்கள் ஓடிக்கொண்டிருந்தது. இதனால் இந்த படத்திற்கு பெரிதாக தியேட்டர் கிடைக்கவில்லை. அந்த படங்களுக்கு மக்கள் மத்தியில் சப்போர்ட் இருந்ததன் காரணமாக இந்த படமும் சரியாக போகவில்லையா என்ற பேச்சும் இருந்தது .ஆனாலும் கங்குவா தயாரிப்பாளர் சைடுல இருந்து படம் லாபம் தான் என்று வந்தது. இந்த சூழலில் தான் ஒரு வாரத்திற்கு முன்பாக படம் ஒடிடியில் ரிலீஸ் ஆனது. அமேசான் பிரைம் இந்த படத்தை வாங்கி இருந்தது.

நிறைய பேர் சொன்னது என்னவென்றால் படம் தியேட்டரில் போகவில்லை என்ன மாதிரி இருக்கும் என்று தெரியவில்லை என்று சொன்னார்கள். இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் ஒரு மில்லியன் ஸ்ட்ரீமிங் ஆகி இருக்கிறதாம் என்பதை படகுழு தெரிவித்துள்ளார்கள். இதை வைத்து பார்க்கும் பொழுது நிறைய பேர் சொல்வது என்னவென்றால் தியேட்டரில் வந்த ரிவியூ வைத்து நாங்கள் படத்தை பார்க்காமல் போய்விட்டோம். நாங்கள் இப்பொழுது ஓடிடியில் பார்த்ததுக்கு அப்புறம் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். அதன் காரணமாக சூர்யா ரசிகர்கள் படம் தியேட்டரில் பெரிதாக கொண்டாடப்படவில்லை என்றாலும் ஓடிட்டியில் நன்றாக வந்து விட்டது அதை மக்கள் புரிந்து விட்டார்கள் என்று சந்தோஷப்பட்டு உள்ளார்கள்.