ஆதிக்க ரவிச்சந்திரன் தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை இயக்கியவர். மிகக் குறுகிய காலத்தின் தன்னுடைய திறமையால் அஜித்தின் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்த படத்திற்காக அஜித் தன்னுடைய உடம்பை சரமாரியாக குறைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார்.

இந்த படம் பொங்கல் பண்டிகையன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அப்போது அஜித்தின் விடா முயற்சி வெளியாகி உள்ளதால் குட் பேட் அக்லி படம் தாமதமாக வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து விட்டது. இதற்கிடையில் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படத்தை இவர்தான் இயக்கியிருந்தார்.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளாராம் ஆதிக். விஷால் ஏற்கனவே மிஸ்கின் இயக்கத்தில் நடித்த துப்பறிவாளன் படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதனால் அதன் பிறகு மிஸ்கின் மற்றும் விஷால் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. துப்பறிவாளன் இரண்டாம் பக்கத்தை விஷால் இயக்கி நடிக்க உள்ளதாக அறிவித்தார் .

ஆனால் இந்த படம் உருவாகுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் ஆதிக்கிரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்கே ஆண்டனி இரண்டாம் பாகத்தில் விஷால் நடிக்க உள்ளாராம். மேலும் இந்த படத்திற்கு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விஷாலுக்கு மார்கண்டனி கம்பேக் கொடுத்த நிலையில் இந்த படமும் பெரிய அளவில் பேசப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
