தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் எம்ஜிஆர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி தனக்கென தனி ராஜ்யத்தை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் எம்ஜிஆர்.

குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர் பின் நடிகராக உயர்ந்தார். எம்ஜிஆரின் படங்கள் என்றாலே சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்சன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் இவரது படங்களை மக்கள் வெகுவாக ரசித்தனர். எம்ஜிஆர் படங்கள் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார்.
தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தியவர் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர் உதவும் மனப்பான்மை கொண்டவர் வாரி வழங்கும் வள்ளல். தான் மட்டும் நன்றாக இருந்தால் பத்தாது தன்னை சார்ந்தவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவார். அதற்கு ஒரு சம்பவம் சான்றாக இருக்கிறது.
எம்ஜிஆர் உடன் நெருங்கி பழகியவர் நடிகர் VS ராகவன். அவரது தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருந்திருக்கிறார். அப்போது மருத்துவ செலவுக்காக தனது உதவியாளரிடம் எம்ஜிஆர் பணம் கொடுத்து அனுப்பி இருக்கிறார். ஆனால் VS ராகவன் அதை வாங்க மறுத்து வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். உடனே எம்ஜிஆர் VS ராகவன் தன்னை நெருங்கியவராக நினைக்கவில்லை என்று வருத்தப்பட்டு இருக்கிறார்.

பிறகு ஒரு நிகழ்ச்சியில் VS ராகவனை எம்ஜிஆர் சந்திக்கும் போது VS ராகவன் எம்.ஜி.ஆரை பார்த்து நீங்கள் பணம் கொடுத்து அனுப்பும் போது என்னுடைய தாயார் உடல் நலம் சரியாகி வீட்டிற்கு வந்துவிட்டார். அதனால் தான் அந்த பணத்தை வேண்டாம் என்று சொன்னேன். என் தாயார் வீட்டில் இருக்கும்போது அந்த பணத்தை நான் வாங்குவது சரியல்ல. அது வேற யாருக்காவது தேவைப்படுபவருக்கு உதவியாகட்டும் என்று தான் நான் வாங்கவில்லை என்று கூறினார். அதை கேட்டு நெகிழ்ந்து போன எம்ஜிஆர் அவரை கட்டி அணைத்து நன்றி கூறியிருக்கிறார்.
