அ… கே அஜித்தே… அட இவரு என்னா புதுசா கெளப்புறாரு… ரசிகர்களுக்கு எடுத்துக் கொடுத்த பிரசன்னா!

By vinoth on மார்கழி 17, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்‌ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.

   

90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் பல காதல் படங்களில் நடித்து பெண்களின் ஆசைநாயகனாக இருந்தார். தீனா படம்தான் அவரை முழுமையாக ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது. அதன் பின்னர் அவர் நடித்த அனைத்துப் படங்களும் ஆக்‌ஷன் மசாலாப் படங்கள்தான்.

   

தற்போது அவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக அஜித் ரசிகர்கள் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் ‘கடவுளே அஜித்தே’ என்ற கோஷத்தை எழுப்பி வந்தனர். சமூகவலைதளங்களைத் திறந்தாலே இதுபோன்ற கோஷங்கள்தான் காதில் விழும்படி இருந்தது.

 

அதை ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்காத அஜித் இனிமேல் அப்படி அழைக்கக் கூடாது என அறிக்கை விட்டார். ஆனால் கண்டுகொள்ளாத ரசிகர்கள் கடவுளேக்கு பதில் ரேசரே போன்ற பிற வார்த்தகளைப் போட்டு பரப்பினர்.

இந்நிலையில்தான் அஜித்தோடு குட் பேட் அக்லி படத்தில் நடித்து வரும் பிரசன்னா அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தைப் பகிர்ந்து “அழகே அஜித்தே… இப்படி வச்சிக்கலாமா”  எனக் கேட்டுள்ளார். ஏற்கனவே இருக்குற இரைச்சல் பத்தாதுன்னு இவரு வேற எடுத்துக் கொடுக்குறாரே என நெட்டிசன்கள் கடுப்பாகி வருகின்றனர்