வீட்டிற்கே வந்து நடிகர் அல்லு அர்ஜுன் திடீர் கைது… பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

By Soundarya on மார்கழி 13, 2024

Spread the love

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா 2 திரைப்படம் நேற்று முன்தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையிலும் படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். நேற்று முன்தினம் வெளியான இந்த திரைப்படம் முதல் நாளில் 294 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுவரை இந்திய சினிமாவில் முதல் நாளில் எந்த ஒரு திரைப்படமும் இந்த வசூலை பார்த்தது கிடையாது. தற்போது படம் 1000 கோடி வசூலை தண்டி விட்டது.

ரசிகையின் இறப்பு… “எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறோம்”… நடிகர் அல்லு அர்ஜுன் வேதனை…!! – Seithi Solai

   

இந்த படத்தின் பிரிமியர் ஷோ டிசம்பர் நான்காம் தேதி ஹைதராபாத்தில் சந்தியா திரையரங்கில் நடத்தப்பட்டது. இந்த ஷோவை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தியேட்டருக்கு வந்திருந்தனர். அவர்களுடன் இணைந்து பார்க்க அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் வருகை தந்தனர். படத்தை பார்ப்பதை காட்டிலும் இவர்களை பார்க்கவே ஏராளமான ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர்.

   

Allu Arjun: ரேவதியின் மரணம்.. அல்லு அர்ஜுன் வருத்தம்.. ரூ. 25 லட்சம் நிவாரண உதவி அறிவிப்பு! | Actor Allu arjun condolence about his fan's death on Pushpa 2 movie premiere show - Tamil Filmibeat

 

இந்த காட்சி இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. இதனிடையே கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். ஒரு கட்டத்தில் அவர்கள் தடியடி நடத்திய நிலையில் ரசிகர்கள் அனைத்து பக்கங்களிலும் ஓட்டம் பிடித்தனர்.இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குடும்பத்துடன் படம் பார்க்க வந்த 35 வயதான ரேவதி மற்றும் 9 வயதான அவருடைய மகள் ஸ்ரீ தேஜா இருவரும் நெரிசலில் சிக்கி தடுமாறி கீழே விழுந்தனர்.

#image_title

அப்போது இவர்கள் மீது மற்றவர்கள் ஏறி ஓடிய நிலையில் சுயநினைவை இழந்த நிலையில் இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ரேவதி முன்னதாகவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த அல்லு அர்ஜுன் 25 லட்சம் பணத்தையும் வழங்கினார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அல்லு அர்ஜுன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.