அடேங்கப்பா.! செம பிசியாக இருக்கும் மெய்யழகன்… கார்த்தி Line Up-ல் இத்தனை படங்களா..?

By Soundarya on மார்கழி 13, 2024

Spread the love

நடிகர் கார்த்தி தற்போது நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான மெய்யழகன் படம் நல்ல வரவேற்பு பெற்றது. முக்கியமாக ஆண்களுக்கு மிக அழகாக அந்த படம் connect ஆனது. தற்போது கார்த்தி சர்தார் இரண்டு படத்தில் நடித்திருக்கிறார் . மேலும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

#image_title

கார்த்தியின் அண்ணன் சூர்யாவின் கங்குவா படத்தில் வில்லனாக ரோலில் என்ட்ரி கொடுத்தார். மேலும் அவருக்கே உரித்தான வந்தியதேவன் ரோலில் பிளேபாயாக வரும்போது நன்றாக இருந்தது. இப்படி இருக்க இவர் லயன் அப்பில் இருக்கும் படங்களை பார்த்தால் இவர் அண்ணன் சூர்யாவுக்கும் பயங்கரமாக  டப் கொடுப்பார் என்பது போல தான் தோன்றுகிறது.

   
   

 

அப்படி இவருடைய நலன் குமாரசாமி இயக்கத்தில் லைன் அப்பில் முதலாவதாக இருக்கும் படம் வா வாத்தியார்.  இந்த படத்தில் நடிக்கிறார் கார்த்தி. அடுத்ததாக பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார். அடுத்ததாக, தமிழ் இயக்கத்தில் பெயர் வைக்கப்படாத கார்த்தி29 படம் உள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 படம் உள்ளது. அடுத்தது, சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா 2 படம் உள்ளது.

அதற்க்கு அடுத்ததாக பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் ஒரு படமும் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். இதை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் தீரன் 2 மற்றும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார்.