நாடோடிகள் திரைப்படத்தில் சசிகுமார் அனன்யா போன்ற பல கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும் அனைவரின் நினைவுக்கும் வருவது அந்த காதல் ஜோடி தான். சும்மா இருப்பவர்களை சுரண்டி விடுவது போல பல பிரச்சினைகள் உள்ளாக்கி விடுவார்கள் .அந்த காதல் ஜோடியின் ஹீரோயின் ஆக நடித்தவர்தான் சாந்தினி. சம்போ சிவ சம்போ என்ற பாடலைக் கேட்டால் இவர்களுடைய ஞாபகம் தான் வரும்.

அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஆகிவிட்டார்கள். இந்த படத்திற்கு பிறகு 2ஜி ஸ்பெக்ட்ரம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் சாந்தினி. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை கொடுக்கவில்லை.

நடிகை சாந்தினியை நாடோடிகள் படத்தில் அப்பொழுது பார்த்த மாதிரி இப்போது இல்லை. சினிமாவுக்கு வந்தால் காக்க கூட கலராகும் என்று கூறுவதெல்லாம் உண்மைதான். அப்பொழுது கருப்பாக இருந்த சாந்தினி தற்போது அனைவரும் பார்க்கும் வியக்கும் அளவிற்கு சம ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறிவிட்டார்.

இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது . தற்போது தமிழில் பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
