ஒரு கொள்கையோடு பாடல் எழுத வந்த தாமரை… இன்றுவரை அதை பாலோ செய்கிறார்… அது என்ன தெரியுமா..?

By Soundarya on மார்கழி 12, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத கவிஞர்கள் இருக்கின்றனர். இன்று எப்படி நாம் வைரமுத்து, வாலி, யுகபாரதி என புகழ்கிறோமோ, அதேப் போல 50, 60 களில் கொடிகட்டி பறந்த கவிஞர்களில் ஒருவர்  தான் தாமரை. 1997 இல் சென்னைக்கு வந்த இவர் இசையமைப்பாளர் ஆதித்யனிடம் வாய்ப்பு கேட்க சென்ற இடத்தில் ஓர் ஆங்கில பாடலுக்கு வரிகள் எழுத சொல்லி இருக்கிறார். அதை தாமரை பிரதானமாக பிடித்து பாடல் எழுதியுள்ளார்.

#image_title

அதை பார்த்த ஆதித்யன் உங்களிடம் ஏதோ ஒரு விஷயம் இருக்கு என்று பாராட்டி உள்ளார். அவர் கொடுத்த உற்சாக நம்பிக்கை தான் இன்று திரை உலகின் உச்சத்தில் அவரை கொண்டு போய் சேர்த்துள்ளது. சீமானின் இனியவளே என்ற பாடல் மூலம் பிரபலமானவர். அதன் பிறகு விக்ரமன் இயக்கத்தில் வெளியான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்திலிருந்து மல்லிகை பூவே மல்லிகை பூவே பார்த்தாயா என்ற பாடலும் எழுதி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் .

   
   

 

2000ம் ஆண்டில் மின்னலே படத்தில் வசீகரா என் நெஞ்சினிக்க என்ற பாடலை எழுதி இருந்தார். ஒரு பாடலில் ஒரு வரி மட்டுமல்ல ஒரு வார்த்தையை கூட தவிர்த்து பார்க்க முடியாத அளவிற்கு அவருடைய பாடல்கள் அமைந்திருக்கும். கொங்கு நாட்டிலே பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து , பொருளியல் படிப்பு படிக்க கல்லூரிக்குள் நுழைந்த இவர் போட்டி நிறைந்த திரையுலகில் புதுமை நிறைந்த வரிகளைப் படைத்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்து விட்டார்.

தூய தமிழில் தான் பாடல்கள் எழுதுவேன். இரட்டை அர்த்தம் தரும் வரிகளை எழுதமாட்டேன்’ என்ற நிபந்தனையோடு பாடல் எழுத ஆரம்பித்தவர். அதை இன்றும் கடைபிடித்து வருகிறார். அதனால் அவர் பல பாடல்கள் எழுதாமல் போயிருக்கலாம். ஆனாலும் அவர் எழுதியிருக்கும் பாடல்கள் எல்லாமே வார்த்தைகளால் உயிரூட்டப்பட்டவை ஆகும்.