தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆக பலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவின் திருமணம் மற்றும் வாழ்க்கை பயணத்தை விளக்கும் வகையிலான ஆவணப்படம் சமீபத்தில் நெட்பிலிக்சில் வெளியாகி இருந்தது. இந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் முதல் படம் முதல் தற்போது வரையிலான அனைத்து திரைப்படங்களின் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. அதன்படி அவருடைய கணவர் விக்னேஷ் இவனுடன் இணைந்து பணியாற்றிய தங்களுடைய காதல் மலர்ந்த நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளையும் இணைக்க நயன்தாரா விருப்பப்பட்டார். ஆனால் அந்த திரைப்படத்தின் காட்சிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் மறுத்துவிட்டார்.

இதனால் ஆவணப்படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு தனுஷை கடுமையாக விமர்சித்தேன் நயன்தாரா மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அதில் தடையில்லா சான்றிதழ் மறுக்கப்பட்டது, வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்திருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன் ஆனால் முழுக்க முழுக்க என் மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமே ஆன உங்களுடைய இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று தனுஷை நோக்கி அவர் கேள்வி எழுப்பி இருந்தார். தனுஷ் அனுமதி விளங்காத போதும் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகள் நயன்தாரா ஆவணப்படத்தில் இடம்பெற்று இருந்ததால் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

ஆவணப்படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டதால் சிலர் நயன்தாரா விளம்பரத்திற்காக இதுபோல அறிக்கையை வெளியிட்டு இருந்தார் என விமர்சித்து வருகிறார்கள். இந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நயன்தாரா விளக்கமளித்துள்ளார். அதில், நான் செய்யும் செயல் சரி என்று எனக்கு தோன்றும்போது நான் ஏன் மற்றவர்களை பார்த்து பயப்பட வேண்டும். என்னுடைய ஆவண படத்தை சேல் பண்ணனும்னு நான் பண்ண PR ஸ்டண்ட் என்ன சிலர் விமர்சித்தனர். ஆனால் அதெல்லாம் கிடையாது. எங்களுடைய காதலின் அறிமுகமான இடத்தையும் தருணத்தையும் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளவே அந்த காட்சிகளையும் பாடல் வரிகளையும் பயன்படுத்த நாங்கள் நினைத்தோம்.

வெறும் நான்கு வரிகளுக்காக இப்படி ஒரு வழக்கு தேவையா என்று நயன்தாரா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தனுஷை சந்தித்து பேச எவ்வளவோ முயற்சி செய்தேன் இருந்தாலும் முடியவில்லை. அவருடைய நண்பர்கள் மூலமாக முயற்சித்தும் எதுவும் நடக்கவில்லை. ஒரு போன் கால் மட்டும் பண்ணி பேசி இருந்தா என்ன பிரச்சனை எப்படி சரி செய்யலாம் என்று பேசி அப்போதே தீர்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பு கொடுக்காமல் இத்தனை பெரிய நடிகர் ஏகப்பட்ட ரசிகர்கள் அவர் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கும் இடத்தில் இருந்து கொண்டு இப்படி மோசமாக நடந்து கொண்டது தான் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. ட்ரெய்லர் ரிலீஸ் ஆன போது அதில் எங்கள் மொபைலில் எடுக்கப்பட்ட காட்சிகள் தான் இடம் பெற்றிருந்தன. மக்கள் அதை புரிந்து கொள்ளவில்லை. பலரும் இந்த காட்சி தான் இது தனுஷின் உரிமை என்று கூறினார்கள். எங்க மொபைலில் எடுக்கப்பட்ட வீடியோவை தான் நாங்கள் பயன்படுத்தினோம். இது ஒரு விஷயமே கிடையாது என்று நயன்தாரா விளக்கமளித்துள்ளார்.
Oh apudiya!!!
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 11, 2024
