தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷ். பா. ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். ஆரம்பத்தில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்த இவர் தனுஷ் இயக்கிய காக்கா முட்டை திரைப்படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்த ஒட்டுமொத்த ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.
இந்த திரைப்படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. நல்ல நடிகை என்றாலும் இவருக்கு சரியான வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. அவரின் முகத்திற்கு கிராமப்புற கதைகளே செட்டாகும் என்பதால் அது போன்ற வேடங்கள் மட்டுமே அவரைத் தேடி வந்தது. குறிப்பாக விஜய் சேதுபதியுடன் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, கணவர் பெயர் ரண சிங்கம், இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.
காக்கா முட்டை திரைப்படம் அவரை பெரியளவில் கொண்டு சென்றது. அதன் பின்னர் தமிழ் சினிமாவில் நம்பிக்கை அளிக்கும் நடிகையாக உயர்ந்தார். படிப்படியாக பல நல்ல வேடங்களை செய்து சோலோ ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வரிசையில் தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.

ஆனால் ஒரு கட்டத்தில் க்ளிஷேவான கதைகளாக ஏற்று நடித்ததால் அவரது படங்கள் தொடர் தோல்வி அடைந்து இப்போது பெரியளவில் கையில் படங்கள் இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் அவர் தன்னுடைய திருமணம் பற்றி பேசியுள்ளார்.
அதில் “எங்க அம்மா கடந்த ரெண்டு வருஷமா எனனைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள சொல்லி கேட்டுட்டே இருக்காங்க. கல்யாணம் பண்ணா நல்லா வாழணும். எனக்கு விவாகரத்து எல்லாம் ஒத்து வராது. விவாகரத்துக்கு காரணம் என்னன்னு யோசிச்சா இந்த தலைமுறையினரிடம் நிறைய பிர்ச்சனை இருப்பதா அல்லது வேறு ஏதாவது காரணமா என குழப்பமா இருக்கு. அதனால் கல்யாணம் பண்ண பயமா இருக்கு. எனக்கு பிடிச்ச நபர சந்திச்சா கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன். ஆனால் இன்னும் அந்த நபரை நான் சந்திக்கல” எனக் கூறியுள்ளார்.
