நீங்க மட்டும் எப்பவோ சினிமாவுக்கு வந்திருந்தா உங்கள பாத்து நிறைய நடிகைகள் பயந்திருப்பாங்க.. ரச்சிதா குறித்து ஓப்பனாக பேசிய பிரபல இயக்குனர்..!

By Nanthini on மார்கழி 10, 2024

Spread the love

சின்னத்திரை நடிகை ரச்சிதா கடந்த 2011-ஆம் ஆண்டு பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை அடுத்து இளவரசி, சரவணன் மீனாட்சி, நொச்சிபுரம், இது சொல்ல மறந்த கதை உள்ளிட்ட பல சீரியல்களில் ரச்சிதா நடித்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு பாரிஜாதா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் ரச்சிதா அறிமுகம் ஆனார். தமிழில் உப்பு கருவாடு என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்தார்.  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரச்சிதா பிரபலமானார்.கடந்த 2013-ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகரான தினேஷ் என்பவரை ரச்சிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நம்ம ரட்சிதா மகாலட்சுமியா இது.. பீச்சில் குளுகுளு உடையில் ஹாட் போஸ்.! - Tamil Spark

   

அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர் .தற்போது ரங்கநாயகா என்ற கன்னட படத்தில் ரட்சிதா ஹீரோயினாக நடித்துள்ளார். அந்த படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.  சின்னத்திரையைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் ஜொலித்துக் கொண்டிருக்கும் ரச்சிதா தற்போது இயக்குனர் ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் எக்ஸ்ட்ரீம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அபி நட்சத்திரா, ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர் உட்பட பலர் நடித்துள்ளனர். டி.ஜே.பாலா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ராஜ் பிரதாப் இசையமைத்துள்ளார். சீகர் பிக்சர்ஸ் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார்.என் தயாரித்துள்ளனர்.

   

Xtreme - Official Trailer | First Look | Rchitha mahalakshmi | Rajavel | Release date|Tamil Movie

 

இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் அதில் ரச்சிதாவை இயக்குனர் பாராட்டி பேசினார். அப்போது, நீங்க எப்போ சினிமாவுக்கு வந்து இருக்கணும். உங்கள் அப்படியே சின்னத்திரையில வச்சுட்டு இருந்துட்டாங்க. நீங்களும் அப்படியே போயிட்டீங்க. நீங்க மட்டும் முன்னாடியே பெரிய திரைக்கு வந்து இருந்தா உங்கள பார்த்து நிறைய நடிகைகள் பயந்து இருப்பாங்க. அவ்வளவு அழகான முகம் நன்றாக நடித்து இருக்கீங்க. அற்புதமான படம் என்று ரச்சிதாவை பாராட்டியுள்ளார்.