அக்கினேனி நாகார்ஜுனா என்று அழைக்கப்படும் நாகார்ஜுனா தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவரது தந்தை அக்கினேனி நாகேஸ்வர ராவ் தெலுங்கு சினிமாவில் பணியாற்றிய நடிகர் ஆவார். நாகார்ஜுனா தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். தனது தந்தை நடிகராக இருந்ததால் அதன் மூலம் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் நாகார்ஜுனா.

தெலுங்கு இந்தி தமிழ் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நாகார்ஜுனா. தெனிந்திய நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். 90-க்கும் மேற்பட திரைப்படங்களில் நடித்துள்ளார் நாகார்ஜுனா. 10 மாநில விருதுகளையும் நந்தி விருதுகளையும் பல பிலிம்பேர் விருதுகளையும் வென்று இருக்கிறார் நாகார்ஜுனா.
தமிழில் இவர் கார்த்தியுடன் இணைந்து நடித்த தம்பி திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. தென்னிந்தியாவின் மிகப் புகழ்பெற்ற நடிகர்களுள் ஒருவராக திகழும் நாகார்ஜுனா ஒரு நிஜ வாழ்க்கை ராஜவாக வாழ்ந்து வருகிறார். அவருடைய சொத்து மதிப்பு என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றி இனி காண்போம்.
நாகார்ஜுனாவுக்கு 20 ஏக்கரில் அன்னபூர்ணா ஸ்டுடியோ என்ற தனது தந்தை ஆரம்பித்த பிலிம் சிட்டியை பராமரித்து வருகிறார். 45 கோடி ரூபாய் மதிப்புள்ள பிரைவேட் பங்களா இவருக்கு ஹைதராபாத்தில் இருக்கிறது. பல விலையுயர்ந்த கார்கள் இரண்டு கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார் ரேஞ்ச் ரோவர் கார்கள் ஆகியவற்றை வைத்திருக்கிறார் நாகார்ஜுனா.

800 கோடி மதிப்புள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் கேரளா பிளாஸ்டர் என்ற புட்பால் நிறுவனத்தில் ஒரு பார்ட்னராக இருந்து வருகிறார். இதன் மதிப்பு 300 கோடி. இது மட்டுமல்லாமல் 20 கோடி மதிப்பில் தனி விமானம் வைத்திருக்கிறார் நாகார்ஜுனா. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நாகார்ஜுனாவுக்கு 100 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. இவரின் மொத்த சொத்து மதிப்பு 3100 கோடி ஆகும். இதன் மூலம் ரியல் ராஜாவாக வாழ்ந்து வருகிறார் நாகார்ஜூனா என்பது நமக்கு தெரிகிறது.
