பில்லா என்ற பிளாக்பஸ்டர் கொடுத்தும் அதன் இரண்டாம் பாகத்தை ஏன் இயக்கவில்லை.. இயக்குனர் விஷ்ணுவர்தன் சொன்ன பதில்!

By vinoth on மார்கழி 8, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.

அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்‌ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.

   

   

90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் பல காதல் படங்களில் நடித்து பெண்களின் ஆசைநாயகனாக இருந்தார். தீனா படம்தான் அவரை முழுமையாக ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது. அதன் பின்னர் அவர் நடித்த அனைத்துப் படங்களும் ஆக்‌ஷன் மசாலாப் படங்கள்தான்.

 

அஜித்தை நிரந்தரமான ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றிய படமென்றால் அது 2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம்தான். அந்த படத்தை இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தார். கதை, திரைக்கதை என அந்த படத்துக்காக மெனக்கெடாமல் மேக்கிங்கில் ஒரு புதிய ஸ்டைலை அந்த படத்தில் உருவாக்கி இருந்தனர். அதனால் மிகப்பெரிய வசூல் சாதனையை அந்த படம் நிகழ்த்தியது.

ஆனால் அதன் இரண்டாம் பாகம் உருவான போது முதலில் அந்த படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்ட விஷ்ணுவர்தன்,பின்னர் விலகிக் கொண்டார். இதற்குக் காரணம் என்ன என்பது குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “அப்போது நான் வேறொரு படத்தை இயக்கி வந்தேன். அதனால் பில்லா 2 வுக்காக அந்த படத்தை விட்டுவந்தால் சரியாக இருக்காது என்று நான் விலகிக் கொண்டேன். நானும் அஜித்தும் விரைவில் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம். ஆனால் அது பில்லா 3 ஆக இருக்காது.” எனக் கூறியுள்ளார்