சினிமாவில் கலக்கிய அப்பா, சீரியல் கலக்கும் மகள். லிவிங்ஸ்டனின் மகள் இந்த சீரியல் நடிகையா?

By Nanthini on மார்கழி 7, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக நடித்தார். அந்த திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் நுழைந்தார். அதோடு அந்த திரைப்படத்தின் உதவி இயக்குனராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். 1988 ஆம் ஆண்டு வெளியான பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

Actor Livingston talks about Religion conversion | 'கிறிஸ்டியனாக இருந்து எனக்கு போர் அடித்துவிட்டது' - மதம் மாற்றம் குறித்து நடிகர் லிவிங்ஸ்டன் பரபரப்பு பேச்சு

   

அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களை ஏற்று நடத்தி வந்த இவர் சுந்தர புருஷன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் மற்றும் உழைப்பாளி போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் சினிமாவில் பெரும்பாலான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் குணச்சித்திர வேடத்திலும் தான் அதிகமாக நடித்துள்ளார். இவருக்கு என்றும் மக்கள் மத்தியில் தனி ஒரு இடம் உள்ளது.

   

Livingston: சீரியல்ல நடிச்சாச்சு.. அடுத்தது சினிமாதான்.. கோலிவுட்டில் நாயகியாகும் லிவிங்ஸ்டன் மகள்! | Actor Livingston's daughter going to give entry to cinema from serials ...

 

இப்படி பல புகழுக்குரிய இவர் ஜசின்தா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஜோவிதா மற்றும் ஜமீனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர் . இவருடைய மூத்த மகள் ஜோவிதா தற்போது சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இருந்தாலும் இவர் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். முதலில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த பூவே உனக்காக என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு அருவி சீரியலிலும் இவர்தான் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது லிவிங்ஸ்டண் தனது மனைவி மற்றும் மகள்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.