எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட ஓய்வு பெற்ற நீதி அரசர் பெற்றுக்கொண்டார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே விஜய் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் .தமிழக வெற்றி கழகம் எனும் கட்சி தொடங்கப் பிறகு அவர் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுதான்.

இந்த நிகழ்வை திருமாவளவன் புறக்கணித்தார். 36 கட்டுரையாளர்களின் கட்டுரைகள் அடங்கிய கட்டுரை தொகுப்பு நூலான இதில் திருமாவளவன் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. முன்னதாக இந்த நூலை விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட விஜய் பெற்றுக் கொள்வதாக இருந்தது.

இந்த நிகழ்வுக்கு திருமாவளவன் வருவதாக ஒப்புதல் அளித்து இருந்தார். ஆனால் அதற்குப் பிறகு தவெவின் கொள்கை விளக்க மாநாடு விக்ரவாண்டியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் தன்னுடைய கொள்கை எதிரியாக பாஜகவையும் அரசியல் எதிரியாக திமுகவையும் விஜய் குறிப்பிட்டார். இந்த சூழலில் திருமாவளவன் நடிகை விஜயுடன் இணைந்து மேடையை பகிர்ந்து கொண்டால் அது திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் என்று பேச்சு எழுந்த அதன் காரணமாக திருமாவளவன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த விஜய் அங்கே வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு செல்பியும் எடுத்துக் கொண்டார் . இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய விஜய், இன்று அம்பேத்கர் உயிரோடு இருந்தால் சந்தோஷப்படுவாரா? வருத்தப்படுவாரா? தேர்தல் நேர்மையாக வெளிப்படையாக நடக்க வேண்டும் என்றால் தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தால் நியமிக்கப்பட வேண்டும்,

அண்ணல் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதை வரமாக நினைக்கிறேன். அசாத்தியமானவர் அம்பேத்கர். அனைவரும் சமம் என்ற சட்டத்தின் பால் பெருமை தேடித் தந்தவர் அம்பேத்கர். தமிழ்நாட்டில் வேங்கைவயல் விவகாரத்தில், சமூகநீதி பேசும் இங்குள்ள அரசு, ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. அம்பேத்கர் இன்று இருந்தால், வேங்கைவயல் போன்ற விஷயங்களை கண்டு வேதனையில் ஆழ்ந்திருப்பார் என்று பேசியுள்ளார்.
