தமிழ் திரை உலகில் நான்கு தலைமுறைகளுக்கு பாட்டு எழுதியவர் தான் கவிஞர் வாலி. இவர் பாட்டு எழுதியதோடு சிறுகதை, கவிதை மற்றும் நடிப்பு என பல்துறை வித்தகராகத்தான் திகழ்ந்தார். அவர் திரைத்துறையில் சுமார் 15,000 பாடல்களை எழுதியுள்ளார். சுமார் 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனமும் எழுதி இருக்கிறார். வடை மாலை என்ற படத்தை மாருதி ராவுடன் இணைந்து இயக்கியிருந்தார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை ஐந்து முறை பெற்ற பெருமைக்குரியவர்.

#image_title
கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். வெளிநாட்டிற்கு செல்ல எத்தனையோ அழைப்பு வந்தும் வாலி செல்லவில்லை. இப்படி பல புகழுக்குரிய வாலி 2013 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும் இன்றும் அவருடைய பாடல்கள் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்து வருகின்றன.

இந்த நிலையில் கவிஞர் வாலி அளித்த ஒரு பேட்டியில் நான் வந்து மியூசிக் டைரக்ட்டர். நீங்க என்னை கமிட் பண்ணிருக்கிறீங்க. எனக்கு மார்க்கெட்டும் இருக்கு. நான் உங்ககிட்ட தத்ததத்ததத்த என்று பாடினால் உங்களுக்கு எதுவுமே புரியாது. இதுக்கு அடிச்சி புடிச்சி உன்னை கடிச்சி நடிச்சி நேரு பாடலாம்.

ஆனால் வாலி சார் இந்த முதல் வரியை மாத்தாதீங்கன்னு சொல்லுவான். இந்த lyric வந்தவுடனே அவனால் இந்த தத்தகாரத்துக்கு lyric வந்தால் எப்படி வரும்னு தீர்மானிக்க முடியாததால் தான் மியூசிக் டைரக்டர் எல்லாம் பயந்துகிட்டு இம்ப்ரெஸ் பண்ணுறதுக்காக டூப் lyric தராங்க. சில பேர் இந்த டூப் lyric நல்லா இருக்குதுனு சொல்லுவான் என்று பேசியுள்ளார்.
