ஆசிட் வீசிடுவேன்னு மிரட்டுறாங்க… முத்துக்குமரன் ரசிகர்கள் செய்த சேட்டை… பிக்பாஸ் அர்ச்சனா போட்ட பதிவு..!

By Soundarya on மார்கழி 4, 2024

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 7 டைட்டில் வின்னர் ஆன அர்ச்சனா கடந்த 2019 ஆம் வருடம் தொடங்கப்பட்ட ராஜா ராணி 2 சீரியல் நடிகை நடித்து வந்தவர். அந்த சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார். இவருக்கு ராஜா ராணி 2 சீரியல் அறிமுகம் கிடைத்த நிலையில் இதில் சிறப்பாக நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் அந்த சீரியலில் இருந்தும் விலகினார். ஆனால் தன்னுடைய விலகல் குறித்து இவர் எந்த ஒரு காரணமும் கொடுக்கவில்லை.அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்.

   

தொடக்கத்திலேயே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம், சர்ச்சைகள் தொடங்கியது. பிறகு வேல்டு கார்டு போட்டியாளராக அர்ச்சனா, தினேஷ் உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். ஒருவழியாக இவர் சாம்பியன் பட்டம் பெற்று வெற்றி பெற்றார். பல போராட்டங்களுக்கு பிறகு பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை அர்ச்சனா வென்றார். டைட்டில் வென்ற அச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பணம், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாட், ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.

   

 

சுமார் 16 லட்சம் வாக்குகளை பெற்று பிக் பாஸ் வரலாற்றில் சாதனை படைத்தவர் அர்ச்சனா. இவர் தற்போது பிக் பாஸ் 8ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கும் அருண் பிரசாத் காதலி தான் நடிகை அர்ச்சனா. இவர் அருணுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். பிக் பாஸ் வீட்டில் அருண் செய்யும் விஷயங்களுக்காக வெளியில் அர்ச்சனாவை  இணையவாசிகள் தொடர்ந்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் கமெண்டுகள் மற்றும் மெசேஜில் மிக அசிங்கமாக பேசுகிறார்கள். எனக்கு R*ape மற்றும் ஆசிட் வீசிவிடுவதாக மிரட்டல்கள் வருகிறது என அர்ச்சனா  பரபரப்பு புகாரை கூறி இருக்கிறார். அதன் screenshot வெளியிட்டு உள்ளார் அர்ச்சனா.