தமிழ் சினிமாவில் இன்றுள்ள வசூல் மன்னன்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் அஜித். அமராவதியில் ஆரம்பித்த அவரின் திரைப் பயணம் இன்று விடாமுயற்சியில் உச்சத்தைத் தொட்டுள்ளது. முதலில் காதல் படங்களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் தீனா உள்ளிட்ட படங்களுக்கு பிறகு ஆக்ஷன் ரூட்டுக்கு மாறினார்.
90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் பல காதல் படங்களில் நடித்து பெண்களின் ஆசைநாயகனாக இருந்தார். இடையில் அவர் சில் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார். தன்னோடு இணைந்து நடித்த நடிகை ஹீராவை அவர் காதலித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின. இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சேர்ந்து சுத்துவதாகவும் கிசுகிசுக்கள் அப்போது பரவின. இதை இருவருமே மறுக்கவில்லை.
ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களின் காதல் பிரிந்தது. இதனால் சில ஆண்டுகள் அஜித் சினிமாவில் சரிவர கவனம் செலுத்தாமல் இருந்தார். அப்போது அமர்க்களம் நடித்த போது ஷாலினி மீது அஜித் காதல் வசப்பட்டு அவரிடம் ப்ரபோஸ் செய்தார். ஷாலினியும் அவர் குடும்பமும் சம்மதித்த பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்.

அஜித்துக்கு அவருடைய நடிப்புப் பயணத்தில் ஒரு மைல் கல்லாக இருந்த படம் என்று ‘வாலி’ திரைப்படத்தை சொல்லலாம். முதல் முதலாக அஜித் அதில் நெகட்டிவ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் அவர் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அந்த படத்தின் பாடல் உருவாக்கத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை இசையமைப்பாளர்கள் சபேஷ் முரளி (வாலி படத்தில் தேவாவின் உதவியாளர்களாக பணியாற்றியவர்கள்) பகிர்ந்துள்ளனர். அந்த படத்தில் இடம்பெற்ற ‘ஓ சோனா’ பாடலைக் கேட்ட அஜித் அது சரியாக ரெக்கார்ட் செய்யப்படவில்லை என்றார்.
ஆனால் எஸ் ஜே சூர்யா இல்லை சார் சரியாகதான் இருக்கிறது என சொல்ல, அஜித் கோபத்தில் திட்டிவிட்டார். அதன் பின்னர் தேவா சார் “ஹீரோவே சொல்லிவிட்டார். அதனால் மறுபடியும் ரெக்கார்ட் செய்யலாம்” என்றார். அப்படி மறுபடியும் வேறு ஒரு ஸ்டுடியோவில் அந்த பாடலை ரெக்கார்ட் செய்தோம்.” எனக் கூறியுள்ளனர்.
