தினமும் காலையிலும் மாலையிலும் டீ அல்லது காபி குடித்தால் தான் பலருக்கு வேலை நடக்கும். ஆனால் தினமும் எடுத்துக் கொள்ளும் டீ காபியை விட அதிக நன்மையை தருவது கிரீன் டீ லெமன் டீ போன்றவைகள் தான். இன்னும் சிறந்ததாக அதிக பலன்களை தரக்கூடியது Turmeric Tea. இதை எப்படி செய்வது இதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை பற்றி இனிக் காண்போம்.

இந்த Turmeric Tea செய்வதற்கு சுத்தமான மஞ்சள் துண்டுகள் தேவைப்படும். தண்ணீரில் மஞ்சளை துண்டு துண்டாக வெட்டி போட்டு கொதிக்க வைத்த உடன் உங்களுக்கு மஞ்சள் தேநீர் கிடைத்துவிடும். இதில் ருசிக்காக மிளகுத்தூளையும் தேனையும் கலந்து சாப்பிடலாம். மஞ்சள் பொதுவாகவே ஒரு கிருமி நாசனி. உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு நிவாரணம் அளிக்கக் கூடியது இந்த Turmeric Tea.
மஞ்சள் கிழங்கு கிடைக்காதவர்கள் மஞ்சள் பொடியை வைத்து Turmeric Tea தயாரிக்கலாம். இந்த மஞ்சள் தேனீரில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் குர்குமின் மாங்கனிஸ் தாமிரம் உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இந்த Turmeric Tea ஐ தொடர்ந்து குடித்து வந்தால் மூட்டு வலி மற்றும் வீக்கம் குறையும்.

மேலும் கிரீன் டீ லெமன் டீ போன்றவற்றை போல இந்த மஞ்சள் டீ க்கும் உடலுக்கு அபாரமான சக்திகளை தரக்கூடிய நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. புற்றுநோய் வராமல் தடுக்கும் வல்லமை இந்த மஞ்சள் தேநீரில் இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதனால் தினமும் பாலால் தயாரிக்கப்பட்ட டீயை குடிக்காமல் மாற்றாக இதுபோல சத்தான தேநீரை அருந்தினால் ஆரோக்கியமாக வாழலாம்.
