தனது அடுத்த படத்திற்கு இளம் இசையமைப்பாளரை வளைத்து போட்ட கமல்… 70 வயதில் ஆட்டம் ஆடப்போகும் ஆண்டவர்..!

By Soundarya on மார்கழி 3, 2024

Spread the love

கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் மூத்த நடிகராகவும் திகழ்பவர். தானது ஐந்து வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர் கமல்ஹாசன். கிட்டதட்ட 65 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பணியாற்றி வருகிறார் கமல்ஹாசன்.1960 ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் 5 வயதாக இருக்கும்போது குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

   

கமல்ஹாசன் தொடர்ந்து பட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பின்னர் 1973 ஆம் ஆண்டு அரங்கேற்றம் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் கமல்ஹாசன். அதற்கு பிறகு அவர் நடித்த வெற்றி படங்கள் கணக்கில் அடங்காதவை. என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் அற்புதமாக நடிப்பவர் கமலஹாசன். இவருடைய நடிப்பில் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படம் வெளிவந்தது.

   

 

ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வசூல் கிடைக்காமல் படு தோல்வி அடைந்தது. இவர் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரோடு இணைந்து இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். மேலும் அமரன் படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் மாபெரும் சாதனை படமாக மாறியுள்ளது.

இந்த அமரன் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இதற்காக இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்த நிலையில் கமலஹாசன் நடிப்பில் அன்பறிவ் இயக்கத்தில் கமல்237 வது படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது.  2025 ஆம் வருடம் இப்படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.