தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் தான் நடிகர் எம் ஜி ஆர். நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல தடைகளை கடந்து நாயகனாக மாறியவர். ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தார். யார் தயாரிப்பாளராக இருந்தாலும் இந்த படம் தொடர்பான முடிவை தானே எடுக்கும் வல்லமையுடன் வளம் வந்தவர் எம்ஜிஆர். அதுமட்டுமல்லாமல் பல நடிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிகளை செய்துள்ளார். படபிடிப்பு தளத்தில் அனைவருக்கும் சமமான உணவு வழங்க வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வந்தவர் எம்ஜிஆர் தான். இவரைப் போலவே சிவாஜியும் தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்று போற்றப்பட்டு மிகப்பெரிய உச்சத்தில் இருந்தார்.

இப்படியான நேரத்தில் சிவாஜியின் டிரைவர் ஒருவர் தனது மகளுக்கு திருமணம் வைத்திருப்பதாக கூறி சிவாஜி இடம் சென்று பத்திரிக்கை வைத்துள்ளார். அப்போது சிவாஜி பத்தாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து இதை திருமண செலவுக்கு வைத்துக் கொள் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த டிரைவர் சிவாஜியின் நிறைய கொடுப்பார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு சிவாஜி உடன் அந்த டிரைவர் வரும்போது எம்ஜிஆருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதனால் அந்த டிரைவரை எம்ஜிஆருக்கு நன்றாகவே தெரியும். அவர் எம்ஜிஆருக்கு பத்திரிக்கை வைக்க சென்றதும் உடனே எம்ஜிஆர் வாபா நீ வருவன்னு எனக்கு முன்னாடியே தெரியும் சிவாஜி கொடுத்த பணம் உனக்கு பத்தலையா இந்த இத வச்சுக்கோ என்று கூறி அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். உடனே அந்த டிரைவர் எம்ஜிஆரை வணங்கி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். எந்த விஷயம் எப்படியோ சிவாஜிக்கு தெரியவர அந்த டிரைவரை அழைத்து நீ எம்ஜிஆரை போய் பார்த்தியா அவர் உனக்கு பணம் கொடுத்தாரா என்று கேட்டுவிட்டு நான் ஒரு குடும்பஸ்தன் என்னால் இவ்வளவுதான் கொடுக்க முடிந்தது எம்ஜிஆருக்கு நிறைய பெருந்தன்மை இருக்கு அவரால் முடிந்ததை அவர் கொடுத்திருக்கிறார் இதை வச்சு சந்தோஷமா உன்னோட பொண்ணு கல்யாணத்தை நடத்து என்று சிவாஜி கூறியுள்ளார்.
