தமிழ் சினிமாவில் இன்று காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் கலக்குபவர் தான் சூரி. மதுரையை சேர்ந்த இவருடைய இயற்பெயர் ராமன். ரஜினியின் தீவிர ரசிகரான இவர் தளபதி படத்திற்குப் பிறகு அந்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரமான சூர்யா என்பதை தன் பெயராக மாற்றிக் கொண்டார். பிறகு சினிமா ஆசையில் மதுரையிலிருந்து சென்னைக்கு வந்தார். ஆரம்பத்தில் பட வாய்ப்பு தேடி ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து உள்ளார். ஒரு கட்டத்தில் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்ட இவருக்கு வயிற்று பிழைப்புக்காக சினிமாவில் செட் அமைக்கும் பணி கிடைத்த நிலையில் அதையும் செய்து வந்தார்.

அப்போது சில இயக்குனர்களிடம் சூரி வாய்ப்பு கேட்ட நிலையில் லிங்குசாமி தன் தயாரிக்கும் படங்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கி வந்தார். அதன் பிறகு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்தத் திரைப்படத்தில் பரோட்டா காமெடி மூலம் இவர் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். வெண்ணிலா கபடி குழு திரைப்படத்திற்கு பிறகு பரோட்டா சூரி என்று அடையாளம் இவருக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து விஜய், அஜித் மற்றும் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் காமெடியனாக வலம்.
)
அந்த சமயத்தில்தான் வெற்றிமாறன் சூரியிடம் கதை சொல்ல சென்ற நிலையில் சூரியை தன் படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க போகிறேன் என்று சொன்னதும் சூரிக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. ஆனால் வெற்றிமாறன் சூடிட்டு முதலில் சொன்ன கதை சில காரணங்களால் டிராப் ஆனது. அதன் பிறகு விடுதலை படத்தின் கதையை சொல்லி சூரியை ஹீரோவாக்கி வெற்றிமாறன் அழகு பார்த்தார். இந்த திரைப்படம் சூரிக்கு சினிமாவில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்தின் மூலம் அனைவரும் சூரியை ஹீரோவாக ஏற்றுக் கொண்டனர். இந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து சூரிக்கு ஹீரோவாக நடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது.
அதன்படி கொட்டுக்காளி திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்ற நிலையில் அடுத்ததாக கருடன் திரைப்படத்திலும் ஆக்சன் ஹீரோவாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து அடுத்ததாக விடுதலை 2 திரைப்படத்தின் ரிலீஸுக்காக சூரி காத்திருக்கின்றார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் ஏராளமான உணவகங்களை நடத்தி வருகின்றார். அந்த பிசினஸை அவருடைய சகோதரர்கள் கவனித்து வருகின்றனர்.)
சினிமா மட்டுமல்லாமல் பிசினஸ் மூலமும் கோடி கோடியாய் சம்பாதித்து வரும் சூரி தற்போது ஒரு படத்தில் நடிக்க 5 கோடி வரை சம்பளம் வாங்குகின்றார். மேலும் பிஎம்டபிள்யூ, இனோவா போன்ற சொகுசு கார்களையும் இவர் வைத்துள்ள நிலையில் இவருக்கு தற்போது 70 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஒருவேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்ட இவர் இன்று தன்னுடைய உழைப்பால் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியாக மாறியுள்ளார்.
