பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பாலிவுட்டின் பாட்ஷாவாக மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவருடைய அடுத்தடுத்த படங்கள் வரவேற்பு பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலையும் குவித்து வருகிறது. கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான ஜவான்,பதான் உள்ளிட்ட படங்கள் வெளியாகி வசூலை குவித்தது. இவர் நடிப்பு .தயாரிப்பு மட்டுமல்லாமல் மற்ற பிசினஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் .தன்னுடைய மகனுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
)
ஷாருக்கான் அவருடைய தியாவால் ஸ்காட்ச் விஸ்கி நிறுவனத்தை கடந்த வருடம் தொடங்கினார். இந்த நிறுவனத்தை தன்னுடைய மகன் ஆர்யன் காணுடன் இணைந்து நடத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவருடைய விஸ்கி பிராண்ட் உலகளவில் சிறப்பான விஸ்கியாக தேர்வாகியுள்ளது. தி டெஸ்டிங் அலையன்ஸ் சார்பாக சர்வதேச அளவில் சிறந்த மதுபானங்களுக்கான போட்டி நடத்தப்பட்டது.

இந்த நிலையில் அதில்தான் இந்த ஆண்டிற்கான சிறந்த மதுபானமாக ஷாருக்கானின் ஸ்காட்ச் விஸ்கி தேர்வாகி இருக்கிறது. கடந்த வருடம் தான் இந்த தொழிலில் ஷாருக்கான் நுழைந்தார். இருப்பினும் கடந்த ஆண்டு மட்டுமே 200 முதல் 300 கோடி ரூபாய் இந்த தொழிலில் லாபத்தை பெற்று உள்ளாராம். இது உறுதிப்படுத்தப்படாத தகவலாக இருந்தாலும் இவ்வளவு கோடி லாபத்தோடு பாராட்டுகளையும் இந்த தொழில் ஷாருக்கான் மற்றும் அவருடைய மகன் கானிற்கு பெற்றுக் கொடுத்து இருக்கிறது.

இந்த விஸ்கியானது 3900 7200 மற்றும் 4200 என்று விற்கப்படுகிறது. சர்வதேச அளவில் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்குரிய பிரபலமாக ஷாருக்கான் இருக்கும் நிலையில் அவருடைய சொத்து மதிப்பு 7,300 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. அவருடைய மகனின் சொத்து மதிப்பும் அதிகமாக உள்ளது. மும்பையில் 37 கோடி ரூபாயில் இவர் வீடு வாங்கி இருக்கிறாராம். சாதாரண மிடில் கிளாஸ் இளைஞனாக சினிமாவில் நுழைந்த ஷாருக்கான் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களால் ரசிகர்களை மிக சிறப்பாக கவர்ந்து உச்சத்திற்கு சென்றுள்ளார்.
