தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாவர் MGR. மக்கள் மனதில் நீங்காத் இடம் பிடித்தவர் MGR. எம்ஜிஆருக்கு இருந்தவர்கள் எல்லாம் ரசிகர்கள் அல்ல பக்தர்கள் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு MGR மீது தமிழக மக்கள் அன்பும் பாசமும் வைத்திருந்தனர்.

தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய MGR அரசியலில் களம் இறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார் MGR.
MGR நல்ல குணம் கொண்டவர். உதவும் மனப்பான்மை கொண்டவர். அதேபோல மிகவும் ஜாலியான மனிதரும் கூட. அதற்கு சான்றாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அது என்னவென்று இனி காண்போம்.
MGR நடிப்பில் மிகவும் பிரபலமடைந்து வெற்றி பெற்ற திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படத்திற்கு தான் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று படப்பிடிப்பு நடத்தினார்கள். இந்த படத்தில் நடிகை லதா அறிமுகமானார். அப்போது சிங்கப்பூரில் இந்த படத்தின் சூட்டிங் நடந்த போது தான் தங்கி இருந்த அறையில் யாருக்கும் தெரியாமல் லதா ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று விரும்பி ஆர்டர் போட்டு வாங்கி இருக்கிறார்.
அந்த நேரத்தில் MGRரின் துணைவியார் ஜானகி அம்மாள் அங்கு வரவே ஐஸ்கிரீமை ஒளித்து வைத்திருக்கிறார். பின்னர் அவர் சென்றவுடன் சாப்பிட்டு இருக்கிறார் லதா. மறுநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் எம்ஜிஆர் என்ன ஐஸ்கிரீம் நல்லா இருந்துச்சா என்று கேட்டிருக்கிறார். உடனே லதா உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டிருக்கிறார்.

உடனே MGR நீங்க என்ன ஆர்டர் போட்டாலும் பில்லு எனக்கு தான் வரும் அப்படின்னு சொல்லி சிரித்திருக்கிறார். மன்னிச்சிடுங்க இனிமே நான் ஆர்டர் போட மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார் லதா. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீங்க என்ன விருப்பப்படுகிறீர்களோ அதை நீங்க சாப்பிடுங்க பில்லு நான் கட்டிக்கிறேன் என்று கூறியிருக்கிறார் எம்ஜிஆர்.
