இயக்குனர் பாக்கியராஜ் தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார். முன்னணி இயக்குனரான பாரதிராஜாவிடம் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் பாக்யராஜ் அசிஸ்டெண்டாக வேலை பார்த்துள்ளார். கடந்த 1979-ஆம் ஆண்டு ரிலீசான புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் மூலம் பாக்யராஜ் ஹீரோவாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு சுவர் இல்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், விடியும் வரை காத்திரு, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள் உள்ளிட்ட படங்களில் பாக்யராஜ் நடித்தார்.

அந்த காலகட்டத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பூர்ணிமா ஜெயராமை பாக்யராஜ் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் இருக்கின்றனர். பாக்யராஜ் தனது மகன் சாந்தனுவை சக்கரகட்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு ஆயிரம் விளக்கு, கண்டேன், அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட திரைப்படங்களில் சாந்தனு நடித்துள்ளார். சின்னத்திரை தொகுப்பாளரான கீர்த்தியை சாந்தனு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் பாக்கியராஜ் மகன் சாந்தனு பள்ளியில் படிக்கும் போது செய்த சேட்டைக்கு பாக்யராஜ் மன்னிப்பு கேட்ட சம்பவம் குறித்து பிரபல நடிகர் செம்புலி சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்து உள்ளார். அதில், சாந்தனு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயத்தில் டீச்சர் ஒருத்தங்க அவன ஏதோ ஒரு தப்புக்காக திட்டிட்டாங்க.

அதனால அவங்க மேல கோவமா இருந்த சாந்தனு பள்ளியில் ஒரு ரூமில் இருந்தா ஆசிரியரை சந்திக்க டீச்சர் சென்ற போது இருவரையும் உள்ள தனியா விட்டு வெளிய பூட்டிட்டான். இது பெரிய பிரச்சினையாக மாறி அப்பா அம்மாவ கூட்டிட்டு வரணும்னு சொல்லிட்டாங்க. கடைசில பாக்கியராஜ் தான் போயி என் பையன் ஏதோ தெரியாம பண்ணிட்டான் மன்னிச்சுக்கோங்க என்று கூறி பள்ளியில் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த சம்பவத்தை செம்புலி பகிர்ந்துள்ளார்.
