தொடர் தோல்வி.. பிரபல இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி.. இதுவாவது கை கொடுக்குமா..?

By Nanthini on கார்த்திகை 27, 2024

Spread the love

அப்பா மற்றும் அண்ணன் மூலமாக சினிமாவிற்குள் ஈசியாக நுழைந்து இருந்தாலும் தன் திறமையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் ஜெயம் ரவி. ஆனால் அதை தக்க வைக்க முடியாமல் சமீப காலமாகவே போராடிக் கொண்டிருக்கிறார். காரணம் இவர் சமீப காலமாகவே நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சொல்லிக் கொள்ளும்படி இல்லாமல் தோல்வியை சந்தித்து வருகின்றன. இவருக்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டும் தான் வெற்றியை கொடுத்திருந்தது. அதுவும் இவர் நான்கு நடிகர்களில் ஒருவராக நடித்திருந்ததால் மட்டும்தான் அந்த படம் பெயர் வாங்கி கொடுத்தது. இதனால் மீண்டும் எப்படியாவது தன்னை நிரூபித்து காட்ட வேண்டும் என்று ஜெயம் ரவி தவித்துக் கொண்டிருக்கிறார்.

சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஜெயம் ரவி போட்ட 4 கண்டிஷன்கள்!.. செம டெரரா இருக்காரே!…. - CineReporters

   

சர்ச்சை மற்றும் கிசுகிசுக்களில் சிக்காத நடிகர்களில் ஒருவராக இருந்த இவர் கடந்த சில மாதங்களாக தனது மனைவியை விவாகரத்து செய்த பேச்சு தான் பேசும் பொருளாக மாறி உள்ளது. இருந்தாலும் இவர் மீது எந்தத் தவறும் இல்லை என்று ரசிகர்கள் இவருக்கு சாதகமாக குரல் கொடுத்து வருகிறார்கள். இவருடைய விவாகரத்திற்கு முக்கிய காரணம் ஜெயம் ரவியின் மாமியார் தான் என கூறப்படுகிறது. மாமியாரின் தயாரிப்பில் சில திரைப்படங்களில் நடித்ததால் ஏராளமான பிரச்சனைகளை ஜெயம் ரவி சந்தித்துள்ளார். இதனால்தான் இவருடைய மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளார்.

   

ஜெயம் ரவியை அடிமாடாக நடத்திய மாமியார்.. ஜெயம் ரவி விவாகரத்து பின்னால் அனுபவித்த கொடுமைகள்.. - Dinaseval News

 

தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வியை சந்தித்ததால் சினிமாவில் தொடர் தோல்விகளை சந்தித்து விடக்கூடாது என்பதற்காக எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் ஜெயம் ரவி இருக்கின்றார். ஆனால் தீபாவளி என்று வெளியான பிரதர் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து ஜெனி மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய திரைப்படங்களில் ஜெயம் ரவி நடித்து வருகின்றார். அதே சமயம் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய திரைப்படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்க உள்ளார்.

டிக்கிலோனா' பட இயக்குனரின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோ!

இதனைத் தொடர்ந்து வடக்குப்பட்டி ராமசாமி மற்றும் டிக்கிலோனா போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் யோகி உடன் ஜெயம் ரவி கூட்டணி வைக்க உள்ளார். இவர்கள் கூட்டணியில் வருகின்ற படம் எந்த மாதிரியான கதை என்பது ஒன் லைன் ஸ்டோரியாக வெளிவந்துள்ளது. அதாவது ஜெயம் ரவியின் சொந்த வாழ்க்கையில் நடந்தது போல படத்திலும் மாமியார் கொடுமை அனுபவிக்கும் மருமகன் விஷயத்தை தான் படமாக்க போகிறார்களா. இதன் மூலமாக மாமியாரிடம் அனுபவித்த கொடுமைக்கு ஜெயம் ரவி பதிலடி கொடுக்கும் வகையில் ரியலாக நடிக்கப் போகின்றார். ஜெயம் ரவி தான் பட்ட கஷ்டங்களையும் துன்பங்களையும் காட்டும் விதமாக இருப்பதால் நிச்சயம் இந்த திரைப்படம் அவருக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.