90களிலேயே 100 நாட்களைத் தாண்டி ஓடிய நடிகர் விஜயின் படங்கள்.. இதோ முழு லிஸ்ட்..!

By Nanthini on கார்த்திகை 26, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லியோ திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்த நிலையில் அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான கோட் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் நல்ல வசூலை வாரி குவித்தது.

நடிகர் விஜய்: அரசியலில் சாதிக்க நினைப்பது என்ன? ரசிகர்கள் வாக்குகளாக  மாறுவார்களா? - BBC News தமிழ்

   

இதனைத் தொடர்ந்து விஜய் தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படத்திற்குப் பிறகு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில் இந்த படம் தான் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் கடைசி படம் என சொல்லப்படுகிறது. இதனால் இந்த திரைப்படம் இது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் விஜய் நடிப்பில் 100 நாட்களுக்கு மேல் ஓடிய தமிழ் திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

   

பூவே உனக்காக படத்திற்கு இரண்டு கிளைமாக்ஸ் இருந்தது.. உண்மையை கூறிய கதாநாயகி

 

பூவே உனக்காக:

விஜய் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் பூவே உனக்காக. இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் சங்கீதா இணைந்து நடித்திருந்தார். குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ஆனந்தம் ஆனந்தம் வாழும் என்ற பாட்டு இன்றும் ரசிகர்கள் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் சுமார் 200 நாட்களுக்கு மேல் ஓடியது.

Love Today 1997 Full Movie Online - Watch HD Movies on Airtel Xstream Play

லவ் டுடே:

1997 ஆம் ஆண்டு இயக்குனர் பாலசேகரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லவ் டுடே. இந்த திரைப்படத்தில் சுவலட்சுமி, மந்த்ரா மற்றும் ரகுவரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.

நேருக்கு நேர்' வெளியான நாள்: இரட்டை நாயகப் படங்களுக்கான சிறந்த முன்னுதாரணம்  | nerukku ner release day - hindutamil.in

நேருக்கு நேர்:

1997 ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் நேருக்கு நேர். இந்த திரைப்படத்தில் சூர்யா, விஜய், சிம்ரன் மற்றும் கௌசல்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் 125 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.

விஜய்க்கு கிடைத்த தேசிய விருது! - Kungumam Tamil Weekly Magazine

ஒன்ஸ்மோர்:

கடந்த 1997 ஆம் ஆண்டு எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஒன்ஸ்மோர். இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி மற்றும் சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் சுமார் 125 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.

காதலுக்கு மரியாதை' வெளியான நாள்: அனைத்து வயதினருக்கும் ஏற்ற தரமான காதல்  படம் | kadhalukku mariyadhai release day - hindutamil.in

காதலுக்கு மரியாதை:

1997 ஆம் ஆண்டு பாஸில் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காதலுக்கு மரியாதை. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஷாலினி நடித்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.

நினைத்தேன் வந்தாய் படத்தில் முதல் சாய்ஸ் தொடையழகி இல்லையாம்.. 22 வருடம்  கழித்து வெளிவந்த சீக்ரெட்! - Cinemapettai

 

நினைத்தேன் வந்தாய்:

1998 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் தேவயானி மற்றும் ரம்பா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் மணிவண்ணன் மற்றும் சார்லி ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

Priyamudan (1998) - Photos - IMDb

பிரியமுடன்:

இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படம் தான் பிரியமுடன். 1998 ஆம் ஆண்டு இயக்குனர் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கௌசல்யா நடித்திருந்தார். இந்த திரைப்படம் 100 நாட்களைக் கடந்து ஓடியது.