தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ.ஆர் ரகுமான். ஆஸ்கார் விருது பெற்ற பெருமைக்குரியவர். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கதீஜா மற்றும் ரஹிமா என்ற இரண்டு மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் மகன் இசையமைப்பாளராக முயற்சி மேற்கொண்டு வருகின்றார். சமீப காலமாகவே தன்னுடைய அப்பாவுடன் பல மேடைகளில் தோன்றி வருகிறார்.
&fmt=webp)
இப்படியான நிலையில் ஏ ஆர் ரகுமானிடம் இருந்து பிரிவதாக அவருடைய மனைவி சாய்ரா பானு சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். அதில், திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாய்ரா பானு தனது கணவர் ஏ.ஆர் ரகுமானை விட்டு பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார். இருவருக்குமான இடைவேளியை தொடர்ந்து வழி மற்றும் வேதனையும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ஏ.ஆர் ரகுமான் எமோஷனலாக பதில் அறிக்கையும் வெளியிட்டார். இதன் மூலம் அவர்களின் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

ஏ.ஆர். ரஹ்மானையும் மோகினி டேவையும் இணைத்து வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அதற்கு ஏடிகே பதிலடி கொடுத்து இருக்கிறார். இது குறித்து அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி ஒரு மனிதனை என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்ததே கிடையாது. அவரைப் பற்றி பேசுவதற்கு எனக்கு அருகதையே கிடையாது. அவருடைய பர்சனல் லைஃபுக்குள் நான் செல்ல விரும்பவில்லை.

ஆனாலும் சொல்கிறேன், தற்போது ஏ ஆர் ரஹ் மான் குறித்து வெளிவரும் வதந்திகள் பணத்திற்காகவும், பிரபலத்திற்காகவும், பரப்ப படுகிறது. ஆகையால் அதை எல்லாம் நம்பி கமெண்டுகளில் ஏ ஆர் ரஹ்மான் சாரை தாக்கி பேசுவது போன்றவற்றை செய்யாதீர்கள் என்று நான் சொல்ல முடியாது. அது உங்களுடைய இஷ்டம். ஆனால், நான் இப்போது சொல்கிறேன். அவர் அவருடைய டெக்னீசியன்களை, அவரிடம் பணியாற்ற வருபவர்களை ஒரு கடவுள் போல நடத்துவார் அப்பேர்பட்ட மனிதனை நாம், அவர் எவ்வளவு கொடுத்து இருக்கிறார் என்பது இங்கு முக்கியமில்லை. அவர் எவ்வளவு ஒரு குழந்தைத்தனமான மனிதர் என்பது எங்களுக்கு தெரியும் எங்கள் சாரை பற்றி எங்களுக்கு தெரியும்” என்று ஏடிகே வீடியோ வெளியிட்டுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
