வடிவேலுவின் இந்த ரெண்டு படத்துக்கும் வசனம் எழுதியது இவரா?… ஆனா அவர் இயக்கத்தில் உருவான படத்தில் ஏன் அவர் நடிக்கவில்லை?

By vinoth on கார்த்திகை 22, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனதிலே படத்தில் தோன்றி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் வடிவேலு. இந்த படத்தில் இடம்பெற்ற போடா போடா புண்ணாக்கு என்ற பாடலின் சில வரிகளையும் பாடினார். இந்த படத்தில் கவுண்டமணி செந்தில் போன்ற இரு ஜாம்பவான்கள் இருந்த போதும் வடிவேலு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் விதமாக நடித்திருந்தார்.

இதையடுத்து சிங்காரவேலன் படத்தில் கமல்ஹாசனோடு நடிக்கும் போது அவரின் உடல்மொழி பிடித்துப் போய் கமல்ஹாசன் தேவர் மகன் படத்தில் வாய்ப்பளித்தார். தேவர் மகன் படம் வடிவேலுவுக்கு ஒரு நல்ல பிரேக்காக அமைந்தாலும், இயக்குனர் வி சேகரின் இயக்கத்தில் அவர் அடுத்தடுத்து நடித்த ‘வரவு எட்டணா செலவு பத்தனா’, காலம் மாறி போச்சு, நான் பெற்ற மகனே போன்ற படங்கள்தான் அவரை காமெடியில் உச்சம் தொட வைத்தன.

   

#image_title

   

அதன் பிறகு கவுண்டமணி செந்திலும் மார்க்கெட்டும் டவுன் ஆக வடிவேலுவின் கொடி உயரப் பறந்தது. போட்டிக்கு விவேக் இருந்தாலும் அவரால் வடிவேலு அளவுக்கு உச்சம் தொட முடியவில்லை என்பதுதான் உண்மை. வடிவேலுவை புகழின் உச்சத்தில் கொண்டுபோய் வைத்த படம் என்றால் அது சுந்தர் சி இயக்கிய ‘வின்னர்’ மற்றும் ‘கிரி’ ஆகிய இரு படங்களை சொல்லலாம். அந்த இரு படங்களிலும் வடிவேலுவும் ஒவ்வொரு வசனமும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

 

இந்த இரண்டு படங்களுக்கும் வசனம் எழுதியவர் சுந்தர் சி யின் இணை இயக்குனர்களில் ஒருவரான பூபதி பாண்டியன்தான்.ஆனால் பூபதி பாண்டியன் இயக்குனராக உருவான போது அவரின் ஒரு படத்தில் கூட வடிவேலு நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பூபதி பாண்டியன் இயக்கிய பட்டத்து யானை படத்தில் வடிவேலு ஒப்பந்தம் ஆனபோதும் கடைசி நேரத்தில் வெளியேறினார். அதன்பின்னர் சந்தானம் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.