கங்குவாவை தொடர்ந்து 600 கோடி பட்ஜெட்டில் நடிக்கப் போகும் சூர்யா.. அதுவும் பான் இந்தியா படத்தில்.. விட்டதை பிடிப்பாரா..?

By Nanthini on கார்த்திகை 21, 2024

Spread the love

சினிமாவை பொறுத்த வரையில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான். இது எல்லாம் முன்னாடி நடிகர்களுக்குமே நடக்கின்ற ஒரு விஷயம். ஆனால் சிறுத்தை சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி வெளியான கங்குவார் திரைப்படத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் வச்சி செய்து வருகின்றனர். சினிமா விமர்சனங்கள் ஆன ப்ளூ சட்டை மாறன் மற்றும் பிஸ்மி உள்ளிட்ட பலரும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இறந்ததற்கான காரணமே தங்குவா பட குழுவினரின் பேச்சு தான். சென்னை தொடங்கி மலேசியா வரை தயாரிப்பாளர் ஞானவேல் மற்றும் சூர்யா ஆகியோர் மேடையில் ஓவர் பில்டப் செய்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினர்.

After Kanguva Suriya Next Periodic film Karna : காத்துவாங்கும் கங்குவா;  அதற்குள் 600 கோடி பட்ஜெட்டில் அடுத்த வரலாற்று படத்துக்கு ரெடியாகும் சூர்யா?

   

இருந்தாலும் ஒற்றை ஆளாக படத்தை தாங்கி நின்ற சூர்யாவின் நடிப்பு, ஒளிப்பதிவு மற்றும் சிவாவின் பிரம்மாண்ட படைப்பு இதெல்லாம் தமிழ் சினிமாவில் புதியது என்று ஜோதிகா மற்றும் மாதவன் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர். கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா 44 திரைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கேங்ஸ்டர் ஆக நடித்து வருகின்றார். அதனைப் போலவே ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூரியன் 45 திரைப்படத்திலும் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களும் ஹிட் கொடுக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

   

600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சூர்யாவின் புதிய படம்!

 

ஏற்கனவே சுதா கொங்கரா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படத்தை ஹிந்தியில் Sarfira என்ற பெயரில் தயாரித்ததன் மூலமாக பாலிவுட்டில் கால் பதித்த சூர்யா ஒரு வரலாற்று திரைப்படத்தில் நடிக்கின்றார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் ஓம் பிரகாஷ் இயக்க உள்ள நிலையில் கர்ணா என்று பெயரிடப்பட்டுள்ளது.

300 கோடி கங்குவாவை விடுங்க.. 600 கோடி கர்ணன் ஏன் தாமதமாகுது தெரியுமா?..  தயாரிப்பாளர் ஓபன் டாக்! | Actor Suriya's Bollywood proect Karna delayed  because of this reason - Tamil Filmibeat

இந்த திரைப்படம் கங்குவாவை விட அதிக பொருட்ச அளவில் அதாவது 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. கங்குவா பட விமர்சனத்தின் மூலமாக பாடம் கற்று வேறு யாரும் முயற்சிக்காத வகையில் தமிழ் சினிமாவில் இருந்து இரண்டாவது பான் இந்தியா படமாக சூர்யாவின் கர்ணா திரைப்படம் உருவாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இந்த திரைப்படம் கட்டாயம் 100 கோடி வசூலை குவிக்கும் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.