நீதிபதியிடம் தனுஷும்-ஐஸ்வர்யாவும் சொன்ன விஷயம்… ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சியான செய்தி..!

By Soundarya on கார்த்திகை 21, 2024

Spread the love

பிரபல நடிகரான தனுஷும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவும் கடந்த 2004-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ஆம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தனுஷும் ஐஸ்வர்யாவும் பிரிந்து வாழ்கின்றனர்.

பரஸ்பர விவாகரத்து கோரி நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் மனு | Actor Dhanush-Aishwarya file petition in court for mutual divorce

   

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருந்தது. பின்னர் மகன்களுக்காக இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என கூறப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாரதவிதமாக கடந்த 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களது திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

   

Dhanush Aishwarya Love Story,தனுஷ்- ஐஸ்வர்யா பிரிவு! 18 வருட திருமண வாழ்க்கையில் தனுஷ் எப்படிப்பட்டவர்? - relationship goals from the love story and 18 years of married life of actor dhanush ...

 

தற்போது தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தடுத்த படங்களில் தனுஷ் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதேபோல ரஜினிகாந்த் படம் மக்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். ஆனால் இருவரும் ரஜினிக்காக சேர்ந்து வாழ்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

ஹீரோவாகும் நடிகர் தனுஷின் மகன் - புது திட்டம் போட்ட ஐஸ்வர்யா..! - தமிழ்நாடு

அதாவது தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனு மீது சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அதில் தனுஷ் – ஐஸ்வர்யாவை தனியாக அழைத்து சேர்ந்து வாழ விருப்பம் உள்ளதா என நீதிபதி விசாரணை நடத்தியதில் இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாகவும், விவாகரத்து வேண்டும் எனவும் இருவரும் நீதிபதியிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதனையுடுத்து விவகாரத்து பெறுவதில் தனுஷ் – ஐஸ்வர்யா உறுதியாக உள்ளதால் வரும் 27ம் தேதி நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.