நடிகர் விஜய் தளபதி 69 படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் அதன் பிறகு முழு நேர அரசியல் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் பலருக்கும் இந்த செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் விஜய் நடத்திய தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டுக்கு 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரன்டதால் அவருடைய அரசியல் என்ட்ரி அட்டகாசமாக ஆரம்பமாகி உள்ளது. இப்படி விஜய் சினிமாவை விட்டு விலகிய நிலையில் அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

#image_title
மகனை ஹீரோவாக்க வேண்டும் என்ற ஆசை விஜய்க்கு இருந்தது. இதற்காக பல முன்னணி இயக்குனரிடம் கதை கேட்டு வந்தார். ஆனால் சஞ்சய் தனக்கு நடிப்பில் விருப்பமில்லை என்று சொன்னதால் அவருடைய விருப்பப்படி என்ன செய்ய விரும்புகிறாரோ அதே செய்யட்டும் என்று விஜய் விட்டுவிட்டார். இதனிடையே கடந்த ஆண்டு நடிகர் விஜயின் மகன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக இருப்பதாகவும் அவர் இயக்க உள்ள முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.

#image_title
ஆனால் அந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. அந்த படத்தில் நடிக்க ஹீரோ கிடைக்காமல் திண்டாடிய விஜய் மகன் இறுதியாக நடிகர் சந்திப் கிஷனிடம் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும் இவர் இயக்கும் படத்திற்கு அனிருத் தான் இசையமைப்பார் என்றும் கூறப்பட்டது.

#image_title
ஆனால் தற்போது அவருடைய படத்திற்கு அனிருத் இசையமைக்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பதிலாக நடிகர் விஜயின் வாரிசு படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தமன் தான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் குறித்த அப்டேட்டுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
