இப்படி உசுப்பேத்தியே என்ன நடக்க வச்சி சோலிய முடிச்சீட்டிங்க… ஆடுகளம் நரேனிடம் fun பண்னிய அஜித்!

By vinoth on கார்த்திகை 19, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றுள்ள வசூல் மன்னன்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் அஜித். அமராவதியில் ஆரம்பித்த அவரின் திரைப் பயணம் இன்று விடாமுயற்சியில் உச்சத்தைத் தொட்டுள்ளது. முதலில் காதல் படங்களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் தீனா உள்ளிட்ட படங்களுக்கு பிறகு ஆக்ஷன் ரூட்டுக்கு மாறினார்.

90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் பல காதல் படங்களில் நடித்து பெண்களின் ஆசைநாயகனாக இருந்தார். இடையில் அவர் சில் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார். தன்னோடு இணைந்து நடித்த நடிகை ஹீராவை அவர் காதலித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின. இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சேர்ந்து சுத்துவதாகவும் கிசுகிசுக்கள் அப்போது பரவின. இதை இருவருமே மறுக்கவில்லை.

   

ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களின் காதல் பிரிந்தது. இதனால் சில ஆண்டுகள் அஜித் சினிமாவில் சரிவர கவனம் செலுத்தாமல் இருந்தார். அப்போது அமர்க்களம் நடித்த போது ஷாலினி மீது அஜித் காதல் வசப்பட்டு அவரிடம் ப்ரபோஸ் செய்தார். ஷாலினியும் அவர் குடும்பமும் சம்மதித்த பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்.

   

இப்போது முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார் அஜித். அவரின் சமீபகாலப் படங்களில் எல்லாம் அவர் கோட் சூட் அணிந்துகொண்டு ஸ்டைலாக நடந்து வரும் காட்சிகள் அதிகமாக இடம்பெறுகின்றன. இது அவரது ரசிகர்களால் ரசிக்கப்பட்டாலும் இதற்கு எதிராக நகைச்சுவையான விமர்சனங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

 

#image_title

இந்நிலையில் இதுபற்றி பிரபல நடிகர் ஆடுகளம் நரேன் ஒரு நகைச்சுவையான சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “நானும் அஜித் சாரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தோம். அப்போது இடைவேளையில் அஜித் சார் என்னிடம் வந்து ‘நான் டயலாக் பேசுவது சரியாக இல்லை என்று சொல்கிறார்கள். நான் ஒரு வசனம் பேசுகிறேன். எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்’ எனக் கேட்டார். அதற்கு நான் உடனே பதறிப்போய் “சார், நீங்க நடந்து வந்தாலே முடிஞ்சிடுச்சு’ என்றேன். அதற்கு அவர் ஜாலியாக ‘இப்படி சொல்லி சொல்லியே என்னை எல்லா படத்துலயும் சும்மா நடக்க வச்சிட்டீங்க” என சொல்லிவிட்டு சென்றார்” எனப் பகிர்ந்துள்ளார்.