சவால் விட்ட நபர்.. வெறும் நான்கே வரிகளில் மகாபாரத கதையை பாடி முடித்த கவிஞர் கண்ணதாசன்..!

By Nanthini on கார்த்திகை 17, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய மனித உணர்ச்சிகளால் அனைத்திற்கும் தனது பாடல்கள் மூலமாக உயிர் கொடுத்தவர்தான் கண்ணதாசன். காதல், தாலாட்டு மற்றும் சோகம் என்று அனைத்திற்கும் தன்னுடைய வரிகளால் ஆறுதல் கூறியுள்ள கண்ணதாசனின் இன்று இல்லை என்றாலும் அவருடைய பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கிறது. இதற்கு இசையமைப்பாளர் எம் எஸ் வி முக்கிய காரணம் என்று சொல்லலாம். எம் எஸ் வி மற்றும் கண்ணதாசன் இடையே நெருங்கிய நட்பு இருந்த நிலையில் இவர்களின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கவியரசு கண்ணதாசன் 10 | கவியரசு கண்ணதாசன் 10 - hindutamil.in

   

சினிமாவில் புகழின் உச்சத்திற்கு சென்ற கண்ணதாசன் தனக்கு போட்டியாக யாருமே இல்லை என்று நினைத்துக் கொண்டு எம் எஸ்வியுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார். இப்படி சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த கண்ணதாசனிடம் மகாபாரத கதையை நான்கே வரிகளில் எழுத முடியுமா என்று ஒருவர் கேட்டுள்ளார்.

   

Untold Story Of Mahabharata,பாஞ்சாலியின் மானம் காக்க கண்ணன் மலை போல் புடவை  கொடுக்க என்ன காரணம்? - untold story of mahabharata : reason for krishan  gave a saree to protect the honor of panjali -

 

அந்த வாய்ப்பை அப்படியே பிடித்துக் கொண்டு கண்ணதாசன் எழுதிய பாடல் தான், பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான், அந்த பாரத போர் முடிக்க சங்கை எடுத்தான், பாண்டவர்க்கு உரிமை உள்ள பங்கை கொடுத்தான், நம் படிப்பதற்கு கீதை என்னும் பாடம் கொடுத்தான் என்று நான்கே வரிகளில் கண்ணதாசன் மகாபாரத கதையை பாடி முடித்தார். இந்த பாட்டு பற்றி பல இடங்களில் பேசியுள்ள எம் எஸ் வி, இந்தப் பாட்டை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் தூரத்தில் இருந்து கிருஷ்ணன் நம்மை பார்ப்பது போன்று தோன்றும் என கூறியுள்ளார்.