தமிழக பாஜகவின் முகமாக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். அண்ணாமலை மாநில தலைவராக பதவியேற்ற பிறகு அவர் கட்சி ரீதியாக ஓரம் கட்டப்பட்டார். அதனை பலமுறை காயத்ரியே பகிரங்கமாக பல இடங்களில் தெரிவித்துள்ளார். அதன்பிறகு பாஜகவை விட்டு வெளியேறிய காயத்ரி தன்னுடைய எக்ஸ் தளத்தில் அண்ணாமலை செய்யும் உள்ளடி அரசியலை அம்பலப்படுத்தி வந்தார். குறிப்பாக பாஜக வார் ரூம் என்ன செய்கிறது? அதற்குள் அண்ணாமலைக்கு எதிராக பேசுபவர்களை எப்படி டார்கெட் செய்து ட்ரோல் செய்கிறார்கள் என்பதை எல்லாம் அப்படியே வெளிச்சம் போட்டு காட்டினார்.

சிறிது காலம் அரசியல் பாதையை விட்டு அமைதியாக இருந்து வந்த காயத்ரி பிறகு திமுகவில் இணைவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர் அதிரடியாக அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுகவின் மாநில மகளிர் அணி துணை தலைவராக காயத்ரி ரகுராம் இருந்து வருகிறார். தொடர்ந்து எதிர்க்கட்சிகளை பல இடங்களில் அவர் விமர்சனம் செய்து பேசி வருகின்றார். இந்த நிலையில் நேற்று அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய காயத்ரி ரகுராம் நயன்தாராவையும் தனுசையும் வம்புக்கு இழுத்து உள்ளார்.

அந்த கூட்டத்தில் பேசிய காயத்ரி, நயன்தாரா நடிச்சு சம்பாதிச்சா நம்மளுக்கு என்ன? திருமண வீடியோவை வித்தி சம்பாதிச்சா நமக்கு என்ன? தனுசுக்கும் நயன்தாராவுக்கு இடையே சண்டை வந்தா நமக்கு என்ன? நாம்ப நம்மளோட வேலைய பாப்போம். மதுரையில் இவ்வளவு பெரிய வளர்ச்சி வந்திருக்கும் அதற்கு முக்கிய காரணம் நம்முடைய முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் எடப்பாடி என்று கூறி தடுமாறிய காயத்ரி பிறகு சமாளித்து புரட்சி தலைவர் எம்ஜிஆர் என்று பேசினார். நயன்தாரா மற்றும் தனுஷ் விவாகரத்தை பெரிதாக இன்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவங்க சண்டை போட்டா நமக்கு என்ன, அவங்க சண்டை போடலனா நமக்கு என்ன என்று பேசி வாயை கொடுத்து அவரே மாட்டிக்கொண்டு உள்ளார்.
