இன்றைய தினம் மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி நயன்தாரா தனுஷுக்கு இடையே ஆனால் மோதல் தான். நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்றது. ஆனால் திருமணத்திற்கு பின்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் எதுவுமே வெளிவரவில்லை.

சில நாட்களுக்கு பிறகு அவர்கள் தங்களது திருமண நிகழ்வை நெட்பிளிக்ஸ் இல் டாக்குமெண்ட்ரியாக வெளியிடப் போவதாக அறிவித்தார்கள். அதற்கு பிறகு வெகு நாட்கள் ஆகியும் வெளிவரவே இல்லை. சமீபத்தில் தான் இது வெளியாகிறது என்று டீசர் வந்தது. இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு இடையே நானும் ரவுடிதான் என்ற படத்தின் மூலம்தான் காதல் மலர்ந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ்.
தங்களது திருமண டாக்குமெண்டரியில் தங்களுக்கு காதல் ஏற்பட்ட படத்தின் பாடல்களையும் காட்சிகளையும் உபயோகப்படுத்துவதற்காக என்ஓசி சர்டிபிகேட்டை தனுஷிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் அவர் தரவில்லை. தற்போது டீசரில் மூன்று நொடி மட்டுமே அந்த படத்தின் காட்சிகள் வந்ததால் 10 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் என்று இன்று நயன்தாரா குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.
இது பற்றி வலைப்பேச்சு அந்தணன் பிஸ்மி சக்திவேல் ஆகியோர் தங்களது youtube சேனலில் பேசும்போது தனுஷ் மீது எந்த குற்றமும் இல்லை என்பது போல பேசி இருக்கிறார்கள். அவர்கள் கூறியது என்னவென்றால் என்ஓசி சர்டிபிகேட் தனுஷிடம் பெறுவதற்கு அவர்கள் லீகலாக முயற்சிக்கவே இல்லை. விக்னேஷ் சிவனுக்கும் தனுசுக்கும் இடையே பொதுவான நண்பரான ஸ்ரேயாசை தொடர்பு கொண்டு சும்மா டீ கேட்பது போல் எனக்கு ஒரு மெயில் அனுப்பி விடு என்று விக்னேஷ் சிவன் கேட்டிருக்கிறார்.
அடுத்ததாக தனுஷின் நண்பர் ஸ்ரேயாஸ் தனுஷிடம் கேட்காமல் நான் எப்படி இதை செய்ய முடியும் அவரிடம் கேட்டுட்டு சொல்கிறேன் என்று கூறும் பொழுது விக்னேஷ் சிவன் அதெல்லாம் அவர்கிட்ட கேட்க வேண்டாம் நீயே மெயில் அனுப்பிவிடு என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார். அதற்கு பிறகு ஷ்ரேயாஸ் ஒத்துக்கொள்ளாமல் தனுஷின் கவனத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார். இது தனுசை சற்று கடுப்பாகி இருக்கிறது. இது மட்டுமல்லாமல் நயன்தாராவும் விக்னேஷ்வரும் இணைந்து தனுஷிற்கு பல தரப்பட்ட இடங்களில் இருந்து மிரட்டல்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என் ஓ சி சர்டிபிகேட் கொடுங்க என்று அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

இப்படி செய்ததால் கோபமடைந்த தனுஷ் என்னால் என் ஓ சி சர்டிபிகேட் கொடுக்க முடியாது உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொள்ளுங்கள் என்று கோபத்தில் கூறிவிட்டாராம். இதுதான் அவர்கள் இருவரையும் கோபப்படுத்தி இந்த மாதிரி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். என்னதான் நயன்தாரா பேரில் இது வெளிவந்திருந்தாலும் அதில் எழுதி இருக்கும் விதம் எல்லாமே விக்னேஷ் சிவன் தயாரித்தது போல் தான் இருக்கிறது. தனுஷ் மீது எந்த குற்றமும் இல்லை என்று வலைப்பேச்சு அந்தணன் பிஸ்மி சக்திவேல் ஆகியோர் தங்களது சேனலில் கூறியிருக்கிறார்கள். இது இந்த பிரச்சினையின் கண்ணோட்டத்தையே மாற்றி இருக்கிறது.
