தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்தவர் தான் நடிகை ரம்பா. முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்த முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் இன்றும் உள்ளது. தொடை அழகி ரம்பா என்று அனைவரும் அழைப்பார்கள். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டவர். இந்த நிலையில் சினிமாவில் பிஸியாக இருந்த சமயத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட ரம்பா திருமணத்திற்கு பிறகு கணவருடன் கனடாவில் செட்டில் ஆகிவிட்டார்.

அதன் பிறகு இவர் சினிமா பக்கம் தலை காட்டவில்லை. ரம்பாவுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்காக சினிமாவிலிருந்து ரம்பா ஒதுங்கி இருக்கின்றார். இருந்தாலும் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ரம்பா அடிக்கடி தனது குடும்ப புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ரம்பா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் சினிமாவில் மிஸ் பண்ண படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த வாலி திரைப்படத்தில் நான்தான் ஹீரோயினியா பண்ண வேண்டியது. அதற்காக போட்டோ சூட் எல்லாம் எடுத்தாங்க. ஆனா அந்த படம் மிஸ் ஆகிடுச்சு என்று பேட்டியில் ரம்பா வருத்தத்துடன் கூறியுள்ளார். அஜித், சிம்ரன், ஜோதிகா நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் வாலி.
