15 ஆண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ்… தமிழ் சினிமாவில் அப்படி ஒரு சாதனை செய்த படம் அதுவாகத்தான் இருக்கும்.. செல்வமணிக்கு வந்த சிக்கல்!

By vinoth on கார்த்திகை 14, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 80 களின் இறுதியில் திரைப்பட கல்லூரி மாணவர்கள் வரிசையாக தமிழ் சினிமாவுக்கு வந்து வெற்றிகரமாக படங்களைக் கொடுத்தனர். இயக்குனர்களாக ஆபாவாணன், ஆர் கே செல்வமணி, செந்தில்நாதன் உள்ளிட்டோரும் நடிகர்களாக நாசர், ராம்கி மற்றும் அருண் பாண்டியன் ஆகியோரும் ஜொலித்துக் கொண்டிருந்தனர்.

இதில் தொடக்கத்திலேயே உச்சகட்ட வெற்றியைப் பெற்றவர் ஆர் கே செல்வமணி அவர் இயக்கிய புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் மற்றும் செம்பருத்தி ஆகிய முதல் மூன்று படங்களும் சூப்பர் ஹிட் ஆகி அவரை முன்னணி இயக்குனர் ஆக்கின.

   

ஆனால் அதன் பிறகு அவர் இயக்கிய எந்த திரைப்படமும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.  அதனால் அவர் திரைப்பட சங்கங்களின் தேர்தலில் நின்று தற்போது ஃபெப்சியின் தலைவராக உள்ளார். இதற்கிடையில் தன் படத்தில் நடித்த நடிகை ரோஜாவை திருமணம் செய்துகொண்டார். அவர் இப்போது ஆந்திர அரசியலில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.

   

#image_title

 

செல்வமணி இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை என்றொரு படம் உருவானது. அந்த படம் ஒரு அரசியல் தலைவரின் படுகொலையை மையப்படுத்தி புனையப்பட்ட கதை. அதில் ராம்கி, ரஹ்மான், ரோஜா உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். படம் முடிந்து சென்சாருக்கு சென்றபோது அதில் ஏகப்பட்ட திருத்தங்கள் சொல்லியதால் சிக்கல் எழுந்துள்ளது.

அதனால் பல சிக்கல்கள் உருவாகி அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு 15 ஆண்டுகள் கழித்து 2007 ஆம் ஆண்டுதான் பல சென்சார் கட்களுக்குப் பிறகு ரிலீஸானது. ஆனாலும் அந்த படம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்டு பல ஆண்டுகள் தாமதம் ஆகி ரிலீஸான படம் என்ற சாதனையைக் ‘குற்றப் பத்திரிக்கை’ படைத்துள்ளது.