ஒரு மாதமும் வரக்கூடிய பௌர்ணமி பிரதோஷம் அனைத்துமே சிவபெருமானுக்கு மிக முக்கியமான நாட்கள் தான். சிவபெருமானுக்கு 14 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. ஆனால் ஐப்பசி மாதம் வருகின்ற பௌர்ணமி மிகவும் முக்கியமானது.

ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற கடவுளை விட சிவபெருமானுக்கு மட்டும் தான் அன்னாபிஷேக வைபவம் நடக்கிறது. இந்த அன்னாபிஷேகம் மிக மிக விஷயமான ஒன்றாகும். அன்னாபிஷேகம் செய்த சிவலிங்கத்தை வழிபட்டால் கோடி சிவாலிங்களை தசித்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்தாண்டு ஐப்பசி அன்னாபிஷேகம் நவம்பர் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் அஸ்வினி பரணி கார்த்திகை ஆகிய மூன்று நட்சத்திரங்களும் இணைந்து வருவதால் மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. உச்சி கால வேலையிலும் மாலை நேரத்திலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படும். குழந்தை இல்லாதவர்கள் தொழிலில் நஷ்டம் சரிவுகளை சந்திப்பவர்கள் இந்த அன்னாபிஷேக தினத்தன்று சிவபெருமானை வழிபட எல்லாம் சரியாகும்.

மேலும் ஐப்பசி பௌர்ணமி சிவனுக்கு அன்னாபிஷேக தினத்தன்று உங்களால் முடிந்த அளவுக்கு கோவிலுக்கு அரிசியை தானமாக வாங்கி கொடுங்கள். இது உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தையும் பணவரவையும் பலவித சகல சௌபாக்கியங்களையும் உங்களுக்கு பெற்றுத்தரும். மேலும் அரிசியை தானமாக கொடுப்பதன் மூலம் உணவு தட்டுப்பாடு இன்றி வீடு செல்வ செழிப்புடன் இருக்கும்.
