நான் அன்னைக்கு பண்ணது பெரிய முட்டாள்தனம்.. பல வருடம் கழித்து புலம்பும் பாகுபலி தேவசேனா.. என்னதான் நடந்தது..?

By Nanthini on கார்த்திகை 14, 2024

Spread the love

ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை அனுஷ்கா. அது மட்டுமல்லாமல் இளசுகளின் கனவு கன்னியாக இருந்த இவரை தற்போது திரைப்படங்களில் பார்ப்பது என்பது அரிதான ஒன்றாகி விட்டது. இவர் பாகுபலி திரைப்படத்தில் தேவசேனா கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வந்த அனுஷ்கா அருந்ததி, பாகுபலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கட்டி போட்டார். இவருக்கென மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ஒரு கட்டத்தில் தமிழில் பட வாய்ப்புகள் குறைய தெலுங்கு சினிமா பக்கம் சென்ற அனுஷ்கா சில காலம் அங்கு பயணித்தார்.

42 வயதிலும் அடங்காத ஆசை…! முன்னால் காதலனை நிர்பந்தபடுத்திய அனுஷ்கா…! -  CineReporters

   

இதன் பிறகு இவருக்கு தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அப்படியே குறைந்துவிட்டது. தற்போது உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி உள்ளதால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக தனது உடல் எடையை கூட்டிய அனுஷ்காவால் அதன் பிறகு உடல் எடையை குறைக்க முடியவில்லை. கடந்த சில வருடங்களாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருந்து வரும் நிலையில் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். கடந்த நான்கு வருடங்களில் இரண்டு படங்களில் மட்டுமே அனுஷ்கா நடித்துள்ளார்.

   

உடல் எடையை குறைத்து மீண்டும் களம் இறங்கும் அனுஷ்கா | nakkheeran

 

இந்த நிலையில் அனுஷ்கா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது சினிமா பயணம் குறித்து புலம்பியுள்ளார். அதாவது நான் திரைக்கு வந்த புதிதில் எனக்கு என்ன செய்ய வேண்டும், வாய்ப்பை எப்படி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்தான எந்த ஐடியாவும் கிடையாது. ஒரு கதை பிடித்து விட்டது, கதாபாத்திரமும் பிடித்து விட்டது, மனதில் Fix ஆகிவிட்டால் அந்த படத்தில் கண்டிப்பாக நடிப்பேன். பாகுபலி இரண்டு பாகங்களிலும் நடித்ததற்கு இடையில் தான் இஞ்சி இடுப்பழகி படத்தில் நடிக்க கமிட்டானேன். அப்போது இந்த சமயத்தில் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று பலரும் கூறினார்கள்.

Anushka is an actress who has lost her market | நடிகை அனுஷ்கா இஞ்சு  இடிப்பழகி மோகத்தால் மார்க்கெட் இழந்த சோகம்..!

காரணம் அந்த படத்திற்காக நான் உடல் எடையை அதிகரிக்க வேண்டும். ஆனால் நான் அதை செய்தேன். தைரியம் வேற முட்டாள்தனம் வேற. இது எனக்கு பின்பு தான் புரிந்தது. அதே சமயம் அருந்ததி போன்ற படத்தில் நடித்துவிட்டு விபச்சாரியாக வானம் படத்தில் நடித்தேன், ஆரம்பத்தில் விமர்சித்தாலும் அந்த படம் எனக்கு நல்ல பெயரை தான் வாங்கி கொடுத்தது என்று அனுஷ்கா கூறியுள்ளார். இஞ்சி இடுப்பழகி படத்தில் மட்டும் அனுஷ்கா நடிக்கவில்லை என்றால் அவர் கேரியரில் எங்கேயோ சென்று இருப்பார் என்று ரசிகர்கள் இதையே தான் கூறிவந்த நிலையில் தற்போது அனுஷ்காவும் அந்த படத்தில் நடித்தது பெரிய தவறு என மனம் வருந்தி பேசியுள்ளார்.